தமிழ்நாடு

கூட்டணிக்கு காங்கிரஸ், கைகோர்க்க பா.ஜ.க.- தி.மு.க.வை வெளுத்து வாங்கிய இ.பி.எஸ்.

Published On 2024-11-17 14:54 GMT   |   Update On 2024-11-17 14:54 GMT
  • எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய சங்கங்கள் சார்பில் இன்று மாலை பாராட்டு விழா நடைபெற்றது.
  • முதலமைச்சர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

காவிரி- சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்திய அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய சங்கங்கள் சார்பில் இன்று மாலை பாராட்டு விழா நடைபெற்றது.

அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:-

அதிமுகவில் 50 ஆண்டு காலம் பணியாற்றி இந்த பொறுப்புக்கு வந்தவன் நான். ஒன்றிய செயலாளராக இருந்து முதல்வர் பதவிக்கு உயர்ந்தவன் நான். சொந்த உழைப்பில் பதவிக்கு வந்தவன் நான். நீங்கள் அப்படியா ?

அப்பாவை மகனும், மகனை அப்பாவும் மாறி மாறி பாராட்டிக் கொள்கின்றனர்.

திமுகவிற்காக இரவு பகல்பாராமல் உழைத்தவர்கள் யாரும் இல்லையா ?

திமுகவில் பெண் வாரிசுகளுக்கு எந்த உயர்வும் இல்லை. கருணாநிதியின் அடையாளத்தை வைத்து தான், முதல்வர், துணை முதல்வர் பதவி கிடைத்தது.

ஆட்சிக்கு வந்த பிறகு மக்களை மறந்துவிட்டனர். காங்கிரசுடன் கூட்டணியில் இருந்து கொண்டு, பாஜகவுடன் கைகோர்த்துள்ளனர்.

கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு மத்திய அமைச்சரை அழைத்து வருகின்றனர்.

காவிரி நதி நீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டது அதிமுக அரசு தான். நான் பெற்ற பிள்ளைக்கு பெயர் வைக்கும் வேலையை தான் முதலமைச்சர் செய்துக் கொண்டிருக்கிறார்.

கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த அதிமுக அரசு முயற்சி எடுத்தது.

அதிமுக அரசின் திட்டங்கள் அனைத்தையும் திமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது.

விவசாயிகளுக்கு திமுக அரசு அநீதி இழைத்து வருகிறது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News