தமிழ்நாடு
அர்ச்சகராக பயிற்சி முடித்து பலரும் வந்து கொண்டிருக்கிறார்கள்- மு.க.ஸ்டாலின் பெருமிதம்
- கோயில் இருக்கும் தெருவுக்குள் நுழையாதே என்றார்கள். நுழைந்தோம்.
- கோயிலுக்குள் நுழையாதே எனத் தடுத்தார்கள். நுழைந்தோம்.
திருக்கோயில் அர்ச்சகர், ஓதுவார் மற்றும் தவில், நாதஸ்வர பயிற்சிகளை முடித்த 11 பெண்கள் உள்பட 115 பேருக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சான்றிதழ்கள் வழங்கினார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "கோயில் இருக்கும் தெருவுக்குள் நுழையாதே என்றார்கள். நுழைந்தோம். கோயிலுக்குள் நுழையாதே எனத் தடுத்தார்கள். நுழைந்தோம். கருவறைக்குள் நுழையத் தகுதி உண்டா என ஒதுக்கினார்கள். நுழைவோம் என்று அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகச் சட்டமியற்றினோம்; பயிற்சிப் பள்ளிகள் துவங்கினோம். பயிற்சி முடித்துப் பலரும் வந்துகொண்டிருக்கிறார்கள். திராவிடம் மகிழ்கிறது.
இவர்களைத் தடுக்க ஏற்படுத்தப்படும் அத்தனை தடைகளையும் உடைப்போம்; சமத்துவத்தை நிலைநாட்டுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.