தமிழ்நாடு

2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும்- பாஜக பொதுச்செயலாளர்

Published On 2024-12-22 11:02 GMT   |   Update On 2024-12-22 11:02 GMT
  • பாட்ஷா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அவரது இறுதி ஊர்வலத்தில் குடும்பத்தினர், உறவினர்கள் பங்கேற்றதில் தவறில்லை.
  • குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட, உயிரிழந்த குடும்பத்திற்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம் நடத்தியது.

தஞ்சையில் இன்று பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது, தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

அப்போது அவர் கூறியதாவது :-

அம்பேத்கர் குறித்து மத்திய மந்திரி அமித்ஷா பேசியதை முழுமையாக கேட்காமல் மக்களிடம் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அம்பேத்கர் வாழ்ந்த போதும் அவரது மறைவுக்கு பிறகும் எப்போதும் அவருக்கு உரிய மரியாதை அளித்து வருவது பா.ஜ.க தான். தற்போது அமித்ஷா குறித்து பொய் பிரசாரத்தில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது. அம்பேத்கருக்கு காங்கிரஸ் கட்சி எதுவும் செய்யவில்லை.

தமிழகத்தில் நடந்து வரும் பல்வேறு நிகழ்வுகளை பார்க்கும்போது பயங்கரவாதிகளின் கூடாரமாக தமிழகம் மாறி விடுமோ என அச்சம் ஏற்பட்டுள்ளது. 1998-ம் ஆண்டு கோவையில் நடந்த குண்டு வெடிப்பில் 58-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பலர் பலத்த காயமடைந்தனர்.

இந்தப் பயங்கர குண்டு வெடிப்பை நடத்திய பாட்ஷா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அவரது இறுதி ஊர்வலத்தில் குடும்பத்தினர், உறவினர்கள் பங்கேற்றதில் தவறில்லை. ஆனால் பல ஆயிரம் பேர் ஊர்வலமாக வந்து கோஷமிட்டு சென்றதைப் பார்க்கும்போது தமிழகத்தில் பயங்கரவாதிகளை அரசாங்கம் ஊக்குவிக்கிறதோ என அச்சம் ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதை விட்டுவிட்டு தேச பக்தர்களை போற்ற அரசாங்கம் தயாராக வேண்டும்.

தமிழகத்தில் நடந்து வரும் பல்வேறு நிகழ்வுகள் தேர்தல் நேரத்தில் வாக்குகள் பெற வேண்டும் என்ற அடிப்படையில் நடந்து வருகிறது.

குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட, உயிரிழந்த குடும்பத்திற்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம் நடத்தியது. வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News