தமிழ்நாடு

வகுப்பறையில் குத்திக்கொலை செய்யப்பட்ட ஆசிரியை

Published On 2024-11-20 06:13 GMT   |   Update On 2024-11-20 06:13 GMT
  • மதன்குமார் என்ற வாலிபர் மாணவர்கள் கண்முன்னே கத்தியால் குத்தி உள்ளார்.
  • போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஒரு தலைகாதலால் ஆசிரியை குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வகுப்பறையில் ஆசிரியை பாடம் நடத்திக்கொண்டிருந்த போது உள்ளே நுழைந்த மதன்குமார் என்ற வாலிபர் மாணவர்கள் கண்முன்னே கத்தியால் குத்தி உள்ளார். இதனை அடுத்து படுகாயம் அடைந்த ஆசிரியை ரமணி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஒரு தலைகாதலால் ஆசிரியை குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.  இதையடுத்து ஆசிரியை ரமணியை கொலை செய்த மதன்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

Similar News