தமிழ்நாடு

விஜயகாந்த் நினைவு தினம்.. வாழ்த்துகள் என பதிலளித்த ரஜினி.. வைரல் வீடியோ

Published On 2024-12-28 14:34 GMT   |   Update On 2024-12-28 14:34 GMT
  • விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
  • வெளியூரில் இருந்த வந்த ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் தொண்டர்கள், ரசிகர்கள் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே தலைவர்கள் பலரும் விஜயகாந்தை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் வெளியூரில் இருந்த வந்த ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் இன்று விஜயாந்த் மறைந்து ஒர் ஆண்டு ஆகியுள்ளது என தெரிவித்தனர். உடனே ரஜினிகாந்த் யாரும் எதிர்பார்க்காத வகையில் வாழ்த்துகள் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த செய்தியாளர்கள், மீண்டும் அதனை தெளிவாக கூற, ஒ அப்படியா என கூறினார், அதனை தொடர்ந்து கூலி படம் நல்லா போகுது எனவும் படம் 70 சதவீதம் முடிவடைந்ததாகவும் கூறினார்.

இதற்கு முன்பு திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து கேட்டதுக்கு அப்படியா, எப்போ நடந்துச்சு oh my god Extremely Sorry என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News