உலகம்

மான்செஸ்டரில் இந்திய தூதரகத்தை திறந்து வைத்தார் ஜெய்சங்கர்

Published On 2025-03-09 06:06 IST   |   Update On 2025-03-09 06:06:00 IST
  • பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் இந்திய துணை தூதரகம் திறக்கப்பட்டது.
  • இந்த நிகழ்ச்சியில், பிரிட்டன் துணை பிரதமர் ஏஞ்சலா ரெய்னர் பங்கேற்றார்.

லண்டன்:

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு மத்திய வெளிவிவகாரத்துறை மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக கடந்த 4-ம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டு இங்கிலாந்து சென்றார்.

இதற்கிடையே, நேற்று அயர்லாந்து நாட்டுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். டப்ளின் நகரில் அந்நாட்டு ஜனாதிபதி மைக்கேல் ஹிக்கின்சை நேரில் சந்தித்தார். அப்போது, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டார்.

இதற்கிடையே, வடக்கு அயர்லாந்தின் தலைநகரான பெல்பாஸ்டில் இந்திய தூதரகத்தின் புதிய கிளையை மத்திய மந்திரி ஜெய்சங்கர் நேற்று திறந்து வைத்தார்.

இந்நிலையில், மத்திய மந்திரி ஜெய்சங்கர் நேற்று பிரிட்டன் சென்றடைந்தார். அங்கு மான்செஸ்டரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்திய துணை தூதரகத்தைத் திறந்து வைத்தார். அப்போது, பிரிட்டனுக்கான இந்தியாவின் புதிய தூதரக ஜெனரலாக விசாகா யதுவன்ஷி பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பிரிட்டன் துணை பிரதமர் ஏஞ்சலா ரெய்னர் உள்பட பலர் பங்கேற்றனர்.

அங்குள்ள ஓல்டு டிராபோர்டு ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரிட்டன்வாழ் இந்தியர்களை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். பிரிட்டனில் உள்ள கவுன்டி அணியான லங்காஷைர் பெண்கள் கிரிக்கெட் அணியினரையும் அவர் சந்தித்தார்.

Tags:    

Similar News