உலகம்

பறவைக்காய்ச்சல் எதிரொலி: ஜப்பான் பண்ணையில் 57 ஆயிரம் கோழிகள் அழிப்பு

Published On 2024-05-03 04:41 GMT   |   Update On 2024-05-03 04:41 GMT
  • டோமிசோடா நகரில் உள்ள கோழிப்பண்ணையில் ஆயிரக்கணக்கான கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
  • ஏவியன் இன்புளூயன்சா வைரசால் ஏற்படும் பறவைக்காய்ச்சல் பாதிப்பு அந்த கோழிகளுக்கு பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.

டோக்கியோ:

ஜப்பானின் சிகா மாகாணம் டோமிசோடா நகரில் ஒரு கோழிப்பண்ணை செயல்படுகிறது. இங்கு ஆயிரக்கணக்கான கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த பண்ணையில் சில கோழிகள் மர்மமான முறையில் இறந்தன. இதனையடுத்து அங்குள்ள கோழிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஏவியன் இன்புளூயன்சா வைரசால் ஏற்படும் பறவைக்காய்ச்சல் பாதிப்பு அந்த கோழிகளுக்கு பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே அந்த பண்ணையை சுற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மற்ற கோழிகளுக்கு இந்த பறவைக்காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த அங்கு சுமார் 57 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டு உள்ளன. அதேபோல் இந்த பண்ணையை சுற்றி 3 கிலோ மீட்டர் தொலைவில் கோழிகள் மற்றும் முட்டைகளைக் கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News