உலகம்

கிழக்குப் பகுதியில் இரண்டு கிராமங்களைக் கைப்பற்றிய ரஷிய ராணுவம் - மறுக்கும் உக்ரைன்

Published On 2024-07-02 02:08 GMT   |   Update On 2024-07-02 02:08 GMT
  • உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • கடந்த மே மாதம் முதல் உக்ரைன் தலைநகர் கார்கிவ் மீது ரஷியா தாக்குதல்களை வலுப்படுத்தியுள்ளது.

ரஷியா உக்ரைன் இடையிலான போர் கடந்த 3 வருடங்களாக நடந்து வரும் நிலையில் இந்த போரில் ஏராளமான உயிரிழப்புகளும் உக்ரைன் பகுதிகளில் பலத்த சேதங்களும் ஏற்பட்டுள்ளது. மேற்கு நாடுகளின் உதவியுடன் இந்த போரில் உக்ரைன் ஈடுபட்டுள்ளது. ரஷியாவுக்கு வட கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளித்து வருகின்றன.

 

உக்ரைனை கைப்பற்றுவது தங்களின் நோக்கம் இல்லை என்று கூறும் புதின் மேற்கு நாடுகளால் உக்ரைன் வழியாக தங்களுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதை உறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தலைநகர் கார்கிவ் பகுதியில் உள்ள ஸ்டெபோவா நோவோசெலிவ்கா [Stepova Novoselivka] iமற்றும் டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள நோவோபோக்ரோவ்ஸ்கே [Novopokrovske] ஆகிய இரண்டு கிராமங்களை கைப்பற்றி தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

 

ஆனால் உக்ரைன் ராணுவம் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேற்கூறப்பட்ட பகுதிகளில் ரஷிய ராணுவத்தின் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் முதல் உக்ரைன் தலைநகர் கார்கிவ் மீது ரஷியா தாக்குதல்களை வலுப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News