உலகம்

நடுவானில் இருக்கையை உதைத்த நபர்- வீடியோ வைரல்

Published On 2024-11-28 09:36 IST   |   Update On 2024-11-28 09:36:00 IST
  • ஆவேசத்துடன் கண்மூடித்தனமாக அவருடைய இருக்கையை தொடர்ந்து உதைத்தார்.
  • 30 வினாடிகள் கொண்ட அந்த காட்சி இணையத்தில் வெளியாகி வலைத்தளவாசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்சுக்கு யுனைடட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டது. நடுவானில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் பயணித்த வாலிபர் ஒருவர் திடீரென தனது இருக்கை மீது ஏறினார்.

பின்னர் தனது இருக்கையை பின்பக்கமாக எட்டி உதைத்தார். ஆவேசத்துடன் கண்மூடித்தனமாக அவருடைய இருக்கையை தொடர்ந்து உதைத்தார். 30 வினாடிகள் கொண்ட அந்த காட்சி இணையத்தில் வெளியாகி வலைத்தளவாசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

'இவரை விமானத்தில் ஏற்றியது யார்?' உள்ளிட்ட கருத்துகளை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News