ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய 4 டிரோன்களை சுட்டு வீழ்த்திய அமெரிக்க படை
- ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பதற்காக நடந்து வரும் இந்த சண்டையில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர்.
- ஆளில்லாத 4 டிரோன்களை செங்கடலில் அமெரிக்க போர்க்கப்பலை குறி வைத்து ஏவினார்கள்.
வாஷிங்டன்:
பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேல் படை தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பதற்காக நடந்து வரும் இந்த சண்டையில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர்.இதில் அப்பாவி குழந்தைகள் மற்றும் பெண்கள் தான் அதிகம். ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். செங்கடல் பகுதியில் இஸ்ரேல் நோக்கி செல்லும் சரக்கு கப்பல்களைஅவர்கள் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் செங்கடல் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஹவுதி கிளர்ச்சி யாளர்கள் தாக்குதலை முறியடிக்க செங்கடல் பகுதியில் அமெரிக்கா தனது கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளது. அந்நாட்டு கடற்படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் நாட்டில் இருந்து ஆளில்லாத 4 டிரோன்களை செங்கடலில் அமெரிக்க போர்க்கப்பலை குறி வைத்து ஏவினார்கள். இதனால் உஷாரான அமெரிக்க படையினர் அந்த டிரோன்களை சுட்டு வீழ்த்தி அழித்தனர்.
இந்த டிரோன்கள் வீசியதில் எந்த சேதமும் ஏற்படவில்லை.