தவளகுப்பம் அரசு கலைக்கல்லூரிக்கு புதிய மதில் சுவர்
- சபாநாயகர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் முடிவு
- கல்லூரியின் மேம்பாட்டுக்காக தேவைப்படும் அனைத்தையும் விரைந்து செய்து கொடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உத்தரவிட்டார்.
புதுச்சேரி:
மணவெளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தவளகுப்பம் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வு கூட்டத்தின் போது தற்போது கல்லூரி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவை ஒரே வளாகத்தில் இயங்கி வருவதால் கல்லூரி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரி ஆகியவற்றை தனித்தனி வளாகமாக மாற்றும் வகையில் புதிய மதில் சுவர் அமைக்க வேண்டும். கல்லூரியின் மேம்பாட்டுக்காக தேவைப்படும் அனைத்தையும் விரைந்து செய்து கொடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக விரைந்து ஆலோசித்து புதிய மதில் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இந்த ஆய்வு கூட்டத்தின் போது மேல்நிலைக் கல்வி இயக்குனர் அமன் சர்மா, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி, கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் ராமு, லட்சுமி, காந்தன், தட்சிணாமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, ஞானசேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்