புதுச்சேரி

படுகை அணை கட்டுமானபணியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆய்வு செய்த காட்சி.

படுகை அணை கட்டுமான பணியை மழைகாலத்திற்குள் முடிக்க வேண்டும்

Published On 2023-07-30 08:18 GMT   |   Update On 2023-07-30 08:18 GMT
  • அதிகாரிகளுக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உத்தரவு
  • பொதுப்பணித் துறை சார்பில் ரூ.2 கோடியில் படுகை அணை கட்டப்பட்டு வருகிறது.

புதுச்சேரி:

மங்களம் தொகுதி கீழ்சாத்தமங்கலம் பகுதியில் உள்ள குடுவை ஆற்றில் விவசாயிகள் பயன்பெறு வதற்காக பொதுப்பணித் துறை சார்பில் ரூ.2 கோடியில் படுகை அணை கட்டப்பட்டு வருகிறது.

இதற்கான பணிகளை கடந்த மாதம் முதல்-அமைச்சர் ரங்கசாமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த பணிகளை தொகுதி எம்.எல்.ஏ.வும், வேளாண் துறை அமைச்சருமான தேனீ.ஜெயக்குமார் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். மழைக்காலம் வருவதற்குள் விரைவில் கட்டுமான பணிகளை முடித்து விவசா யிகள் பயன்பாட்டுக்கு அணையை கொண்டு வர பணிகளை துரிதப்படுத்த அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

அதிகாரிகளும் விரைவில் பணிகளை முடிப்பதாக உறுதியளித்தனர். தொடர்ந்து பங்கூர் பகுதி யில் உள்ள ஏரியை புனர மைக்கும் பணிகளையும் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். ஆய்வின் போது பொதுப் பணித்துறை அதிகாரிகள், என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News