கணினி

சத்தமின்றி உருவாகும் ஒன்பிளஸ் பேட் - வெளியீடு எப்போ தெரியுமா?

Published On 2022-11-15 07:25 GMT   |   Update On 2022-11-15 07:25 GMT
  • ஒன்பிளஸ் நிறுவனம் உருவாக்கி வரும் புது டேப்லெட் மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
  • புதிய ஒன்பிளஸ் பேட் மூலம் அந்நிறுவனம் டேப்லெட் சந்தையில் களமிறங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு ஆண்ட்ராய்டு டேப்லெட் மாடல்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்த திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. ஒன்பிளஸ் பேட் மாடல் மீண்டும் உருவாக்கப்பட்டு வருவதாக ஒன்பிளஸ் டிப்ஸ்டரான மேக்ஸ் ஜேம்பர் தெரிவித்து இருக்கிறார். ஒன்பிளஸ் பேட் மூலம் அந்நிறுவனம் டேப்லெட் சந்தையில் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் டேப்லெட் என்ற போதிலும், கடந்த ஒரு வருடமாக இந்த மாடல் உருவாக்கப்பட்டு வருகிறது. ஒன்பிளஸ் ஹார்டுவேர் வளர்ச்சி பிரிவும் ஒப்போ நிறுவன சாதனங்கள் வளர்ச்சி பிரிவு நெருங்கிய பரஸ்பரம் கொண்டிருக்கும் நிலையில், ஒப்போ பேட் மாடல் மேற்கத்திய பகுதிகளில் ஒன்பிளஸ் பேட் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டது. "ஒன்பிளஸ் பேட்" பெயரை அந்நிறுவனம் டிரேட்மார்க் செய்து இருக்கிறது.

ஒன்பிளஸ் பேட் மாடல் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகவும், இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்றும் மேக்ஸ் ஜேம்பர் தெரிவித்து இருக்கிறார். முன்னதாக வெளியான தகவல்களில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் டேப்லெட் மாடலை 2022 முதல் அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டது. ஒன்பிளஸ் தனது முதல் டேப்லெட் பற்றி இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை.

ஒப்போ நிறுவனம் இரண்டு டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. ஒப்போ பேட் 11 இன்ச் 2.5K LCD 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்டிருக்கிறது. ஒப்போ பேட் ஏர் மாடல் 10.36 இன்ச் 2K LCD 60HZ ரிப்ரெஷ் ரேட் கொண்ட ஸ்கிரீன் மற்றும் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர் கொண்டிருக்கிறது.

ஒன்பிளஸ் பேட் மாடல் ஒப்போ பேட் போன்று சக்திவாய்ந்த அம்சங்களை கொண்டிருக்கும் என்றும் இதில் ஆண்ட்ராய்டு 12L ஒஎஸ் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. புதிய டேப்லெட் மாடலுக்கு ஒன்பிளஸ் நிறுவனம் கீபோர்டு டாக் மற்றும் ஸ்டைலஸ் வசதி உள்ளிட்டவைகளை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News