null
ரூ. 24 ஆயிரம் பட்ஜெட்டில் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி இந்தியாவில் அறிமுகம்
- புதிய சியோமி டிவி மெட்டல் பெசல் லெஸ் டிசைன் கொண்டுள்ளது.
- இந்த ஸ்மார்ட் டிவி-யில் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட் டிவி ஃபயர் டிவி ஒ.எஸ். கொண்டிருக்கிறது. அமேசான் ஃபயர் ஒ.எஸ். கொண்டிருப்பதால், இந்த ஸ்மார்ட் டிவி-யில் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு டிவியை குரல் மூலம் எளிதில் இயக்க முடியும்.
இந்த மாடலில் 43-இன்ச் 4K டிஸ்ப்ளே, விவிட்-பிக்சர் என்ஜின் தொழில்நுட்பம், 24 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ, டி.டி.எஸ். ஹெச்.டி. மற்றும் டி.டி.எஸ். விர்ச்சுவல் எக்ஸ் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இந்த டிவி மெட்டல் பெசல் லெஸ் டிசைன் கொண்டுள்ளது. அமேசான் ஃபயர் ஒ.எஸ். 7 வழங்கப்பட்டு இருப்பதால் பொழுதுபோக்கிற்கு 12 ஆயிரத்திற்கும் அதிக செயலிகளை பயன்படுத்த முடியும்.
ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டி.வி. 4K 43 இன்ச் அம்சங்கள்:
43 இன்ச் 3840x2160 பிக்சல் 4K டிஸ்ப்ளே
குவாட் கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராசஸர்
மாலி G52 MC1 GPU
2 ஜி.பி. ரேம்
8 ஜி.பி. மெமரி
ஃபயர் ஒ.எஸ். 7
ரெட்மி வாய்ஸ் ரிமோட்
வை-பை, ஏர்பிளே 2, மிராகேஸ்ட்
ப்ளூடூத் 5.0, 3x HDMI, 2x யு.எஸ்.பி. 2.0
3.5mm ஆடியோ ஜாக், ஈத்தர்நெட்
24 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ
டி.டி.எஸ். ஹெச்.டி., டி.டி.எஸ். விர்ச்சுவல் எக்ஸ்
ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4K 43 இன்ச் மாடலின் விலை ரூ. 26 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட் டிவி ரூ. 24 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் இந்த டிவியை வாங்குவோருக்கு ஒரு ஆண்டிற்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகிறது.