என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
அரியலூர்
- அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
- கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
அரியலூர்:
அரியலூரில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் ராஜீவ் காந்தி (வயது 41). இவர் தனது பள்ளியில் படிக்கும் மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
ஆசிரியர் தன்னிடம் அத்துமீறி நடந்து கொள்வது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், இது குறித்து அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து ஆசிரியர் ராஜீவ் காந்தியை போலீசார் கைது செய்தனர். பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
- தமிழக மக்கள் திமுக மீது வைத்துள்ள அன்பு எடப்பாடி பழனிசாமிக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது.
- எப்போது முடியும் என தமிழர்கள் காத்திருந்த ஆட்சிதான் இபிஎஸ் ஆட்சி.
அரியலூர் மாவட்டம் கொல்லாபுரம் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.120 கோடி மதிப்பிலான 53 வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.88 கோடி மதிப்பில் 507 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* ஒரு சிலரை போல டிவியில் பார்த்து பிரச்சனைகளை தெரிந்து கொள்பவன் அல்ல நான்.
* தமிழக மக்கள் திமுக மீது வைத்துள்ள அன்பு எடப்பாடி பழனிசாமிக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது.
* அதிமுக ஆட்சியில் பல திட்டங்களை கொண்டு வந்தது போல் சிரிக்காமல் பேட்டி அளித்துள்ளார்.
* இபிஎஸ் நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் வந்த முதலீடுகள் எவ்வளவு?
* எப்போது முடியும் என தமிழர்கள் காத்திருந்த ஆட்சிதான் இபிஎஸ் ஆட்சி.
* திட்டங்களுக்கு நிதி ஒதுக்கிவிட்டு ஓய்வு எடுக்க செல்பவன் நான் இல்லை.
* பிரச்சனைகளை நேர்கொண்டு அதனை தீர்ப்பவன் நான், மக்களுக்காக பார்த்து பார்த்து திட்டம் தீட்டுபவன் நான்.
* தேடி வந்து மனுக்கள் தரும் மக்களின் நம்பிக்கையை என்றும் காப்பாற்றுவேன் என உறுதி தருகிறேன்.
* குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
* மிக மிக நலிந்த மக்களுக்கான ஆட்சியாக திமுக ஆட்சி இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
* உங்கள் குடும்பத்தின் ஒருவனாக இருந்து நலத்திட்டங்களை நிறைவேற்றுகிறேன் என்று கூறினார்.
- தீபாவளிக்கு தடையின்றி சிறப்பு பேருந்துகளை இயக்கி சிறப்பாக செயல்பட்டவர் சிவசங்கர்.
- பெரம்பலூர் மாவட்டம் மருதையாற்றின் குறுக்கே ரூ.24 கோடியில் பாலம் அமைக்கப்படும்.
அரியலூர் மாவட்டம் கொல்லாபுரம் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.120 கோடி மதிப்பிலான 53 வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.88 கோடி மதிப்பில் 507 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* முதல்வராக பொறுப்பேற்ற பின் மகளிருக்கான கட்டணமில்லா திட்டத்திற்கு தான் முதல் கையெழுத்திட்டேன்.
* அரியலூர் ஆற்றல் மிகு மாவட்டமாகவும், பெரம்பலூர் பெருமை மிகு மாவட்டமாகவும் மாற வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.
* பெரம்பலூரில் 456 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்துள்ளேன். 27 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி உள்ளேன்.
* அரியலூர் மாவட்டத்தை உருவாக்கியவர், பெரம்பலூர் மாவட்டத்தை சிறப்பு பொருளாதார மண்டலமாக மாற்றியவர் கலைஞர்.
* தீபாவளிக்கு தடையின்றி சிறப்பு பேருந்துகளை இயக்கி சிறப்பாக செயல்பட்டவர் சிவசங்கர்.
* அரசு விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த சிவசங்கரை அரியலூர் அரிமா சிவசங்கர் என அவர் புகழ்ந்தார்.
* ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையை 29 கோடியில் தரம் உயர்த்தும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.
* அரியலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் ரூ.3.20 கோடியில் மேம்படுத்தப்படும்.
* அரியலூர் கலெக்டர் வளாகத்தில தீயணைப்பு மற்றும் மீட்பு படை நிலையத்திற்கு ரூ.4.30 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும்.
* வாடகை கட்டிடத்தில் உள்ள 35 துணை சுகாதார நிலையங்களுக்கு ரூ.15 கோடியில் சொந்த கட்டிடம் கட்டப்படும்.
* பெரம்பலூர் மாவட்டம் மருதையாற்றின் குறுக்கே ரூ.24 கோடியில் பாலம் அமைக்கப்படும்.
* அரசு மாதிரி பள்ளிகளுக்கு ரூ.56 கோடியில் புதிய வகுப்பறை விடுதி கட்டடம் கட்டப்படும்.
* திருமாவின் கோரிக்கையான அரியலூர் வழக்கறிஞர் சங்கத்திற்கு ரூ.101.5 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும் என்று கூறினார்.
- மகளிரால் தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து மிக்க உணவு பொருட்களை சுவைத்து அது குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.
- மேடையில் பேசிய தாய்மார்களின் குழந்தைகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மடியில் அமர வைத்து கொஞ்சி மகிழ்ந்தார்.
அரியலூர்:
பள்ளிக்குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்களை வழங்கும் பொருட்டு, ரூ.22 கோடியில் ஊட்டச்சத்து உறுதி செய் திட்டத்தின் 2வது தொகுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டாரம் வாரணாசியில் தொடங்கி வைத்தார்.
அப்போது அங்கிருந்த உணவு பொருட்கள் கண்காட்சியினை அவர் பார்வையிட்டார். அப்போது மகளிரால் தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து மிக்க உணவு பொருட்களை அவர் சுவைத்து அது குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அங்கிருந்த அங்கன்வாடிக்கு சென்று குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார். பின்னர் அவர் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பினை அவர் வழங்கினார்.
பின்னர் அவர் அங்கு மரக்கன்றை நட்டார். பின்னர் அவர் விழா மேடைக்கு சென்றபோது, பூக்களுடன் நின்றிருந்த குழந்தைகளை பார்த்து அருகில் சென்றார். அப்போது குழந்தைகள் அவருக்கு பூக்களை பரிசளித்தனர். அதனை மகிழ்வுடன் பெற்றுகொண்ட அவர் விழா மேடைக்கு சென்றார்.
மேடையில் வாரணாசியை சேர்ந்த ராகவி, பரமேஸ்வரி சக்கரபாணி, மல்லூர் ராஜேஸ்வரி கார்த்திக், மரவனூர் ஜெயபிரியா பாண்டியன், ஆயிஷா பானு உள்ளிட்ட குழந்தைகள் பெற்ற தாய்மார்களுக்கு அவர் ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கி இத்திட்டத்தின் 2-வது தொகுப்பினை தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் இத்திட்டத்தின் முதலாம் கட்ட பயனாளிகள், இத்திட்டத்தின் பயன் குறித்து பேசினர். சுகந்தி என்ற பெண் பேசும்போது, என் குழந்தை குறை மாசத்தில் பிறந்ததால் எடை குறைவாக இருந்தது. பல இடங்களில் சென்று பார்த்தபோது எந்த பயனும் இல்லை. இந்நிலையில் முதலமைச்சரின் ஊட்டச்சத்து பெட்டகம் கொடுக்கப்பட்டது. இதன் பயனாக எனது குழந்தைக்கு நல்ல வளர்ச்சி தெரிந்தது. தற்போது எனது குழந்தை ஆரோக்கியமாக உள்ளது என்று அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து முதலாம் கட்ட பயனாளி ரம்யா பேசும்போது, எனது குழந்தையின் எடைக்கு ஏற்ற உயரமில்லை. உங்கள் திட்டம் குறித்து கேள்விபட்டு அங்கன்வாடி மையத்திற்கு சென்று ஊட்டச்சத்து பெட்டகத்தை பெற்று அதனை சாப்பிட்டு, எனது குழந்தைக்கு தாய்பால் புகட்டினேன். இதனால் எனது குழந்தை மிகுந்த ஆரோக்கியமாக உள்ளது என்று அவர் கூறினார்.
மகாலட்சுமி என்பவர் பேசும்போது, போன வருடம் கொடுத்த தொகுப்பினை நானும் சாப்பிட்டேன், குழந்தைக்கும் கொடுத்தேன். தற்போது நானும் குழந்தையும் நலமாக உள்ளோம். அதனால் தான் உங்களை பார்த்து நன்றி சொல்ல வந்தேன் என்று அவர் பேசினார்.
மேடையில் பேசிய தாய்மார்களின் குழந்தைகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மடியில் அமர வைத்து கொஞ்சி மகிழ்ந்தார்.
விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கீதா ஜீவன், சிவசங்கர், எம்.பி.க்கள் திருமாவளவன், ஆர்.ராசா, அருண் நேரு, சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், கலெக்டர் ரத்தினசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சுமார் 130 ஏக்கரில் ரூ.1,000 கோடி முதலீட்டில் புதிய காலணி உற்பத்தி தொழிற்சாலை அமைகிறது.
- புதிய காலணி தொழிற்சாலை மூலம் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி அவர் மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரத்தில் உள்ள புதிய சிப்காட் தொழிற்பேட்டைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
ஜெயங்கொண்டத்தில் சுமார் 130 ஏக்கரில் ரூ.1,000 கோடி முதலீட்டில் புதிய காலணி உற்பத்தி தொழிற்சாலை அமைகிறது. இந்த புதிய காலணி தொழிற்சாலை மூலம் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
- பொதுமக்களிடம் கைகளை குலுக்கி, மனுக்களை பெற்றுக்கொண்டு முதலமைச்சர் உற்சாக நடை போட்டார்.
- குழந்தையை கையில் ஏந்தி நின்ற ஒரு தாய்மாரின் அருகில் சென்று குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர், பெரம்பலூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஜெயங்கொண்டம் சென்றார். அங்கு அவருக்கு தி.மு.க.வினரும், பொதுமக்களும் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் காரில் இருந்து இறங்கிய முதலமைச்சர் நடந்தே சென்று பொதுமக்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டார். அப்போது மழை லேசாக தூறியது. இதனை பொருட்படுத்தாமல் பொதுமக்களிடம் கைகளை குலுக்கி, மனுக்களை பெற்றுக்கொண்டு முதலமைச்சர் உற்சாக நடை போட்டார்.
அப்போது அங்கு நின்றிருந்த தாய்மார்களிடம் சிறிது நேரம் உரையாடினார். மேலும் குழந்தையை கையில் ஏந்தி நின்ற ஒரு தாய்மாரின் அருகில் சென்று குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தார்.
இதனை தொடர்ந்து ஜெயங்கொண்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவ சிலையை அவர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சிவசங்கர், ஆர்.ராசா எம்.பி. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 26 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
- தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.
அரியலூர்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் அரசால் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்கிறதா? அரசின் வளர்ச்சி பணிகள் சரியாக நடக்கின்றனவா? என்பதை மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து, நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி கடந்த 5, 6-ந்தேதிகளில் கோவை மாவட்டத்தில் கள ஆய்வை தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 9,10-ந்தேதிகளில் விருதுநகரில் கள ஆய்வு செய்தார். இதன் தொடர்ச்சியாக அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் நலத்திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) கள ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) மாலை சென்னையில் இருந்து விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகிறார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பொதுப்பணித்துறை பயணியர் விடுதிக்கு சென்று இரவு தங்கி ஓய்வு எடுக்கிறார்.
நாளை காலை 9.30 மணியளவில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரத்தில் 130 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் சிப்காட் தொழில் வளாகத்தில், தைவான் நாட்டை சேர்ந்த டீன் ஷூஸ் குழுமம் ரூ.1,000 கோடி முதலீட்டில் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
அதனை தொடர்ந்து அவர் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட வாரணவாசி கிராமத்தில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தமிழக அரசின் ஊட்டச்சத்து உறுதி திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைக்கிறார்.
இந்த திட்டம் ஏற்கனவே கடந்த 2022-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட் டுள்ள பிறந்தது முதல் 6 மாதம் வரையிலான குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்குவதோடு மட்டுமல்லாமல், குழந்தைகளின் நிலையை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் 2-ம் கட்டம் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. இதை தொடர்ந்து காலை 11.15 மணியளவில் அரியலூர்-செந்துறை சாலையில் கொல்லாபுரத்தில் நடைபெறும் அரசு விழாவில் அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 26 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து , 51 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும் 10,141 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
இதே விழாவில் பெரம்பலூர் மாவட்டத்தில் 27 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து, 456 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும் 11,721 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.
பின்னர் மதியம் 12.50 மணிக்கு பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்திற்கு வந்து மதிய உணவு சாப்பிடுகிறார். பின்னர் சற்று நேரம் அங்கு ஓய்வெடுக்கிறார். அதன் பின்னர் மாலை 4.30 மணியளவில் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே அரியலூர் சாலையில் உள்ள பூமணம் திருமண மஹாலில் நடைபெறும் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். அப்போது அவர், 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார்.
கூட்டம் முடிந்ததும் மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு இரவு 6.55 மணிக்கு செல்கிறார். அங்கிருந்து இரவு 7.55 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
அரியலூர், பெரம்பலூர் மாவட்ட அரசு நிகழ்ச்சிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் செய்து வருகின்றன. பெரம்பலூரில் முதலமைச்சர் வரவேற்பு மற்றும் கட்சி கூட்ட ஏற்பாடுகளை முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா எம்.பி. தலைமையில் கட்சியினர் செய்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் பாதையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு அவர் பயணம் செய்யும் சாலைகளில் பாதுகாப்பு கருதி இன்று (வியாழக்கிழமை) டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. மேலும் நாளை (வெள்ளிக்கிழமை) அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்து சென்னை செல்ல உள்ளதால் அன்றும் டிரோன்கள் இயக்கத்திற்கும் மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையால் தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளன. அவர் பங்கேற்கும் விழா நடைபெறும் இடங்கள், அவர் செல்லும் வழிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
- 2 மாவட்ட பயனாளிகள் 10 ஆயிரம் பேருக்கு ரூ. 70 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றுகிறார்.
- பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள் 100 பேர் கலந்து கொள்கிறார்கள்.
அரியலூர்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் அரசால் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்கிறதா? அரசின் வளர்ச்சி பணிகள் சரியாக நடக்கின்றனவா? என்பதை மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து, நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி கடந்த 5, 6-ந்தேதிகளில் கோவை மாவட்டத்தில் கள ஆய்வை தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 9,10-ந்தேதிகளில் விருதுநகரில் கள ஆய்வு செய்தார். இதன் தொடர்ச்சியாக வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கள ஆய்வு செய்து முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதற்காக நாளை மறுநாள்(14-ந்தேதி) மாலை அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார். பின்னர் கார் மூலம் புறப்பட்டு அரியலூர் மாவட்டம் ஜெயங்கோண்டம் பொதுப்பணித்துறை பயணியர் விடுதிக்கு சென்று இரவு தங்கி ஓய்வு எடுக்கிறார்.
பின்னர் மறுநாள் (15-ந்தேதி) காலை 10 மணியளவில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரத்தில் 131 ஏக்கர் பரப்பளவில், ரூ.1000 கோடி மதிப்பீட்டில் சிப்காட் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர் திருமானூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வாரணவாசி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தமிழக அரசின் ஊட்டச்சத்து உறுதித் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இந்த திட்டத்தினை தமிழ்நாட்டில் முதன் முதலாக இங்கு தொடங்கி வைப்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு செந்துறை சாலை கொல்லாபுரம் கிராமத்துக்கு செல்கிறார். அங்கு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மேடையில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் முடிவுற்ற அரசு திட்ட பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 2 மாவட்ட பயனாளிகள் 10 ஆயிரம் பேருக்கு ரூ. 70 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றுகிறார்.
அதன் பின்னர் மதியம் பெரம்பலூர் மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்கிறார். பாலக்கரையில் உள்ள முன்னாள் மத்திய மந்திரி ராசா அலுவலகத்தில் மதிய உணவு சாப்பிட்டு சற்று நேரம் ஓய்வெடுக்கிறார்.
அதன் பின்னர் மாலை 4 மணி அளவில் துரை மங்கலம் சாலை வழியாக பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள பூமனம் திருமண மண்டபத்தில் நடைபெறும் திமுக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார்.
இதில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள் 100 பேர் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கார் மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையம் சென்று அங்கிருந்து விமான மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
முன்னதாக பெரம்பலூர் வருகை தரும் முதலமைச்சருக்கு மாவட்ட திமுக சார்பில் மேலமாத்தூர் பகுதியிலும், வேப்பூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் குன்னம் பகுதியிலும், பெரம்பலூர் நகர தி.மு.க. சார்பில் நான்கு ரோடு ஆகிய பகுதிகளிலும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், திருச்சி சரக டி.ஐ.ஜி. மனோகர் ஆகியோர் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து கொல்லாபுரத்தில் விழா நடைபெறும் இடத்தை பார்வையிட்டார்கள். பொதுப்பணித் துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் விழா மேடை அமைப்பு குறித்து கேட்டறிந்தார்கள்.
தொடர்ந்து பெரம்பலூர் பூமணம் திருமண மண்டபம் மற்றும் முன்னாள் மத்திய மந்திரி ராசா அலுவலகம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் அரியலூர் செல்வராஜ், பெரம்பலூர் ஆதர்ஷ் பசேராவுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.
அரியலூர் மாவட்ட நிகழ்ச்சிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையிலான நிர்வாகிகள் செய்து வருகின்றனர். பெர்ம்பலூரில் முதலமைச்சர் வரவேற்பு மற்றும் கலந்தாய்வு கூட்ட ஏற்பாடுகளை முன்னாள் மத்திய மந்திரி ராசா தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- தொழிற்சாலை மூலம் 15 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என தெரிகிறது.
- பெரம்பலூரில் நடைபெறும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் அவர் பங்கேற்று பேசுகிறார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் சிகாகோ சென்றிருந்த போது அரியலூர் மாவட்டத்தில் 'டீன்ஷூஸ்' நிறுவன காலணி தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதை செயல்படுத்துவதற்காக 15-ந் தேதி அரியலூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டீன்ஷூஸ் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
ஜெயங்கொண்டம் மகிமைபுரம் பகுதியில் 130 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில்பேட்டை வளாகத்தில் டீன்ஷூஸ் குழுமத்தின் இண்டஸ்ட்ரியல் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ரூ.1000 கோடி முதலீட்டில் இந்த தொழிற்சாலை அமைய உள்ளது.
இந்த தொழிற்சாலை மூலம் 15 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என தெரிகிறது. அன்றைய தினம் அரியலூரில் நடைபெறும் அரசு விழாவில் அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கி, முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கிறார்.
பெரம்பலூரில் நடைபெறும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் அவர் பங்கேற்று பேசுகிறார்.
- உடையார்பாளையம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தையில் நடந்தது.
- இந்த மோதலில் கொளஞ்சி மனைவி தேவகி, காமராஜ் மனைவி சரோஜா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குவாகம் கிராமம் வெற்றி தெருவை சேர்ந்தவர் கொளஞ்சி. இவரது மனைவி தேவகி (வயது 40). குவாகம் ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர். அதே பகுதியை சேர்ந்தவர் காமராஜ். அவரது மனைவி சரோஜா (55) குவாகம் ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர்.
கொளஞ்சி மற்றும் காமராஜ் ஆகியோருக்கு இடையே அரசியல் முன் பகை இருந்து வந்தது. கொளஞ்சி வீட்டின் எதிர்ப்புறம் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது அதன் அருகே ஒரு காலி மனை உள்ளது.
இந்த மனையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு கொளஞ்சி மண் கொட்டினார். அப்போது காமராஜ் அந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது எனக் கூறி மண் கொட்ட எதிர்ப்பு தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக இரு தரப்பினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இது குறித்து குவாகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் உடையார்பாளையம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தையில் நடந்தது. அதில் பிரச்சனைக்குரிய இடம் கொளஞ்சிகே சொந்தம் என உதவி கலெக்டர் உத்தரவிட்டார். இதனால் கொளஞ்சி நேற்று காலிமனையில் மண் நிரவ ஆரம்பித்தார். அப்போது மீண்டும் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.
தகவல் அறிந்த குவாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அப்போது போலீசாரின் முன்னிலையில் இரு தரப்பினரும் மாறி மாறி கல்லால் தாக்கி கொண்ட னர். அப்போது கொளஞ்சி மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த நபர்களின் வீடுகள் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டது. மேலும் வீடுகள், 4 பைக்குகள் ஒரு கார் அடித்து நொறுக்கப்பட்டன. உடனே போலீசார் இருதரப்பை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
சம்பவ இடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் தாக்குதலில் வெடித்த, வெடிக்காத நாட்டு வெடிகுண்டுகளை தடயவியல் நிபுணர் குமாரவேல் தலைமையிலான போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மோதலில் கொளஞ்சி மனைவி தேவகி, காமராஜ் மனைவி சரோஜா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் காயம் அடைந்த இருதரப்பை சேர்ந்த 5 பெண்கள் உட்பட 7 பேர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று திரும்பினர்
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கொளஞ்சி தரப்பில் கந்தசாமி, தனவேல், அனிதா, ஆனந்தி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
காமராஜ் தரப்பில் காமராஜ், திரிசங்கு, பாலச்சந்திரன்,சங்கர், பரமசிவம், சூர்யா, உட்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மோதலை தவிர்ப்பதற்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
- கும்பலை சேர்ந்தவர்கள் பல்வேறு இணைய எண்களில் இருந்து பேசியுள்ளனர்.
- போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த இலுப்பையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கருணாமூர்த்தி (வயது 50). இவர் உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடை நடத்தி வருகிறார்.
இந்தநிலையில், இவரை கடந்த ஆண்டு மே மாதம் மர்ம ஆசாமி ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுகையில், வேவ் எப்.எக்ஸ். என்ற இணையதளத்தில் முதலீடு செய்தால் தினமும் வருமானம் வரும் என்றும், குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பல்வேறு இணைய எண்களில் இருந்து பேசியுள்ளனர்.
இவர்களது பேச்சை நம்பிய கருணாமூர்த்தி மர்ம ஆசாமிகள் கூறிய பல்வேறு வங்கிக்கணக்குகளில் ரூ.71 லட்சத்து 28 ஆயிரத்து 770 செலுத்தியுள்ளார். பின்னர் அவர்கள் பணத்தை மோசடி செய்ததால் மனமுடைந்த கருணாமூர்த்தி அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கடந்த மே மாதம் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின்படி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் இணைய குற்றப்பிரிவு) விஜயராகவன், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், மோசடியில் ஈடுபட்டவர்கள் கோவை மாவட்டம், போத்தனூரை சேர்ந்த ரியாஸ்கான் (27), குனியமுத்தூரை சேர்ந்த ரம்யா (28), பாப்பநாயக்கன்புதூரை சேர்ந்த மகேஸ்வரி (47) என தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 23 ஆயிரம், 4 செல்போன்கள், 1 மடிக்கணினி, 2 வங்கிக்கணக்கு புத்தகம், 4 ஏ.டி.எம். கார்டுகள், 4 சிம் கார்டுகள், 2 காசோலை புத்தகம், 4 போலி முத்திரை சீல்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், இந்த மோசடியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று அரியலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான பெண் உள்பட 3 பேரும் தமிழகம் முழுவதும் நெட் ஒர்க் அமைத்து பலரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.
கைதானவர்களின் இணையதளத்தில் பதிவு செய்து பணத்தை இழந்தவர்கள் குறித்த விவரத்தை சேகரிக்கவும், இந்த இணையதளத்தை முடக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் இணையதளம் மூலம் பணத்தை இழந்தவர்கள் சைபர் கிரைம் மற்றும் உள்ளூர் போலீசாரை தொடர்பு கொள்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த மோசடியில் வேறு சிலருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதுபோன்று சிறிய முதலீடு மூலம் அதிக லாபம் பெறலாம் என்று கூறும் யாரையும் நம்பி பணம் அளிக்க வேண்டாம், இணைய மோசடிக்காரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். மேலும் உங்கள் வங்கி தொடர்பான தகவல்கள், ஓ.டி.பி.யை யாரிடமும் கூற வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- எதிர்க்கட்சிகள் வேண்டுமென்று குறை கூறுகிறார்கள்
- பண்பாடு தெரிந்தவர்கள், அதன் அருமை, பெருமை தெரிந்தவர்களுக்கு தான் புரியும்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தனியாருக்கு சொந்தமான இருசக்கர வாகனங்கள் மொபைல் ஆப் மூலம் நாடு முழுவதும் வாடகைக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த வாகனங்களால் தமிழகத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதாக சமூக அலுவலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அதனை அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
வெள்ளத்தடுப்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தியது. எதிர்க்கட்சிகள் வேண்டுமென்று குறை கூறுகிறார்கள் என்றார். தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து சீமான் தெரிவித்த கருத்து குறித்து நிருபர்கள் கேட்டபோது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மனோன்மணியம் சுந்தரனார் காலத்தில் பாடப்பட்டு தமிழக அரசு அதனை ஏற்று அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த பண்பாடு தெரிந்தவர்கள், அதன் அருமை, பெருமை தெரிந்தவர்களுக்கு தான் புரியும். அவரை (சீமான்) போன்றவர்கள் வெறும் போலி அரசியல்வாதிகள். எந்த நேரத்தில் எதையாவது ஒன்றை பரபரப்பு செய்திகளுக்காக பேசுவார்கள். எனவே அவர்களை மக்கள் புறம் தள்ளுவார்கள் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்