என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சென்னை
- புயல் கரையை கடந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.
- அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மாமல்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.
இது, அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், புதுச்சேரி மற்றும் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனையடுத்து புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- புயல் இன்று காைல 11.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
- புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நிவாரணம் வழங்கினார்.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.
புயல் மாமல்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்த நிலையில் இன்று காைல 11.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
புயலால், புதுச்சேரி, மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் அதிகனமழை பெய்தது. இதனால், அங்கு வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாமல்லபுரத்திற்கு நேரில் சென்ற துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார்.
அதன்படி, மாமல்லபுரம் கோவளம் சாலையில் உள்ள முத்தமிழ் அரங்கத்தில் புயலால் பாதிக்கப்பட்ட 120 பேர் கொண்ட, 65 இருளர் குடும்பங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.
அவர்களுக்கு, உணவு, அரிசி, பாய், பெட்சீட், பால், பிரட் உள்ளிட்ட பொருட்களை நிவாரணமாக வழங்கினார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வாயலூர் கிழக்கு கடற்கரை சாலை பகுதிக்கு சென்ற அவர், விழுப்புரம் மாவட்டம் மயிலம் சென்றார்.
அங்கு புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நிவாரணம் வழங்கினார்.
இந்நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை விழுப்புரம் செல்கிறார்.
அங்கு, ஃபெஞ்சல் புயல், மழை பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.
- இயல்புநிலை திரும்பிய பகுதிகளைப் பார்வையிட்டபோது, மக்களின் அன்பையும் வாழ்த்துகளையும் பெற்றேன்.
- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களுடன் ஆய்வு.
தூங்கி வழிந்த நிர்வாகத்தால், மனிதத் தவறுகளால் சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அதிமுக ஆட்சிக்காலம், இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டு ஓரிரவில் இயல்பு நிலைக்குத் திரும்பிடுவது திமுக ஆட்சிக்காலம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தூங்கி வழிந்த நிர்வாகத்தால் - மனிதத்தவறுகளால் சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அ.தி.மு.க. ஆட்சிக்காலம்
இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டு, ஓரிரவில் இயல்பு நிலைக்குத் திரும்பிடும் காலம், நமது திராவிட மாடல் ஆட்சிக்காலம்!
இயல்புநிலை திரும்பிய பகுதிகளைப் பார்வையிட்டபோது, மக்களின் அன்பையும் வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்டு, விழுப்புரம் - திண்டிவனம் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீர்செய்யக் களத்தில் பணியாற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களுடன் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நேற்று காலை 10 மணி முதல் சென்னை விமான நிலையம் மூடப்பட்டது.
- இன்று நள்ளிரவு 1 மணிக்கு சென்னை விமான நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியது.
வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று மாலை மாமல்லபுரம், புதுச்சேரி இடையே கரையை கடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் மாலை வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறைக் காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகள் முழுவதும் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.
பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலை யத்தில் உள்ள ஓடுபாதைகளில் மழை நீர் வெள்ளமாக தேங்கியது. இதைத் தொடர்ந்து நேற்று காலை 10 மணி முதல் சென்னை விமான நிலையம் மூடப்பட்டது. விமான சேவை முழுவதும் நிறுத்தப்பட்டது.
மழை தொடர்ந்து பெய்ததால் இன்று (1-ந்தேதி) அதிகாலை 4 மணிவரை விமானநிலையம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.பின்னர் விமான நிலைய ஓடுபாதையில் தண்ணீர் முழுவதும் அகற்றப்பட்ட நிலையில் மழையும் இல்லாததால் 3 மணி நேரம் முன்னதாகவே நள்ளிரவு 1 மணிக்கு விமான நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியது.
இதனிடையே ஃபெஞ்சல் புயல் அச்சுறுத்தலின்போது நேற்று சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் ஒன்று தரையிறங்க முயற்சித்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் ஓடுபாதையில் இறங்க முயன்ற விமானம் தடுமாறியது. உடனே சுதாரித்து கொண்ட விமானி விமானத்தை தரையிறக்கம் மேலே எழுப்பி பறக்க வைத்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Abolsutely insane videos emerging of planes trying to land at the Chennai airport before it was closed off… Why were landings even attempted in such adverse weather? pic.twitter.com/JtoWEp6Tjd
— Akshita Nandagopal (@Akshita_N) December 1, 2024
- அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
- ஃபெஞ்சல் புயல் எதிரொலியால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மாமால்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்த நிலையில் அது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைக் கொண்டுள்ளது.
அதன்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் வழியாக மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
- ஃபெஞ்சல் புயல் வலுவிழந்ததை அடுத்து, பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
- புதுச்சேரி மாநிலத்திற்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மாமால்லபுரம்- மரக்காணம் இடையே கரையை முழுமையாக கடந்த நிலையில் அது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைக் கொண்டுள்ளது.
இதன் எதிரொலியால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், மூன்று மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், புதுச்சேரி மாநிலத்திற்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 11 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மயிலாடுதுறை, நாகை மற்றும் காரைக்கால் ஆகிய 11 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை தவிர திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், புதுக்கோட்டை, நீலகிரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகம், புதுவை, காரைக்காலில் வரும் 7ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- போதைப்பொருள் புழக்கம் தலைவிரித்து ஆடுகிறது.
- விடியா திமுக ஆட்சியின் அவல நிலையை சுட்டிக்காட்ட வேண்டியது எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் என்னுடைய கடமை.
அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கொலை, கொள்ளை போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
போதைப்பொருள் புழக்கம் தலைவிரித்து ஆடுகிறது.
இதுமட்டுமன்றி ஆசிரியர்கள், மருத்துவர்கள், நெசவாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள், தொழில்துறையினர் என அனைத்து தரப்பினரும் தெருவில் இறங்கி போராடும் சூழலே உள்ளது.
"குற்றச்சாட்டு வைப்பதே எனக்கு வேலையாக போய்விட்டது" என்று கூறும் மு.க.ஸ்டாலின் - விடியா திமுக ஆட்சியின் அவல நிலையை சுட்டிக்காட்ட வேண்டியது எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் என்னுடைய கடமை.
அதற்கு முறையான நடவடிக்கை எடுத்து செயல்படுத்துவது அரசின் கடமை.
அதை செய்யாத, தனக்கு எந்த திறமையும் இல்லாத ஒரு முதலமைச்சரிடம் இப்படிப்பட்ட மடைமாற்றும் பதிலைத்தான் எதிர்பார்க்க முடியும்.
திமுகவிடம் நாகரிகத்தையோ, மக்கள் மீதான அக்கறையோ எதிர்பார்க்க முடியாது தான் என்றாலும், ஸ்டாலினின் சமீபத்திய தரக்குறைவான பேச்சுகளே அதற்கான மிகப்பெரிய சான்றாக அமைகிறது .
நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் முடிந்தால் மக்கள் பணி செய்யுங்கள்; இல்லையேல், நிர்வாகத் திறனில்லை என்று ஒப்புக்கொள்ளுங்கள்.
ஆட்சி இருக்கிறது என்ற ஆணவச் செருக்கில் நீங்கள் பேசும் திமிர் பேச்சிற்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்! என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கொலை, கொள்ளை போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.போதைப்பொருள் புழக்கம் தலைவிரித்து ஆடுகிறது.இதுமட்டுமன்றி ஆசிரியர்கள், மருத்துவர்கள், நெசவாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள், தொழில்துறையினர் என அனைத்து…
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) December 1, 2024
- தமிழ்நாட்டில் மிக அதிக அளவாக திண்டிவனத்தில் 37.40 செ.மீ மழை பெய்திருக்கிறது.
- புதுச்சேரி யூனியன் பிரதேசம் தான் புயலால் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும்போது பெய்த கடுமையான மழையால் தமிழ்நாட்டில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டிலும், புதுவையிலும் மக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் நிலையில், அவர்களின் பாதிப்புகளைக் களைய மாநில அரசுகள் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் மிக அதிக அளவாக திண்டிவனத்தில் 37.40 செ.மீ மழை பெய்திருக்கிறது. நேமூர் 35.20 செ.மீ, வல்லம் 32 செ.மீ. செம்மேடு 31 செ.மீ, வானூர் 24 செ.மீ மழை பெய்திருக்கிறது. இதனால், திண்டிவனம், மயிலம், மரக்காணம், வானூர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. திண்டிவனம் நகரத்தில் கிடங்கல் ஏரி உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. வீடூர் அணையிலிருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் அப்பகுதியிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. பயிர்களுக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
மழையால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் கடுமையான பாதிப்புகளுக்கு அரசின் அலட்சியமும், செயலற்ற தன்மையும் தான் காரணம் ஆகும். திண்டிவனம் உள்ளிட்ட விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் வடிகால்கள் தூர்வாரப்படாததும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததும் தான் இந்த நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களுக்கு அரசுத் தரப்பில் போதிய உதவிகள் வழங்கப்படாததால், சில இடங்களில் உணவு கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
புதுவை, விழுப்புரம் மாவட்டத்தின் எல்லைப்பகுதியான கோட்டக்குப்பத்தில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கியிருப்பதால் பல்லாயிரக்கணக்கான வீடுகளில் வசிக்கும் மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மழை - வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் மீட்புப் பணிகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக வழங்க வேண்டும். பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களை கணக்கிட்டு உழவர்களுக்கும், பொதுவான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள பொது மக்களுக்கும் உரிய இழப்பீடுகளை வழங்க தமிழக அரசு வழங்க வேண்டும்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் தான் புயலால் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளது. புதுச்சேரி நகரத்தில் மட்டும் 47 செ.மீ அளவுக்கு மழை பெய்திருப்பதால் ஒட்டுமொத்த நகரமும் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. மாநில அரசின் சார்பில் உணவு வழங்குவதைத் தவிர ஆக்கப்பூர்வமான பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. புதுச்சேரியில் அனைத்துப் பகுதிகளிலும் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் தேசிய பேரிடர் மீட்புப் படையின் உதவியைக் கோர வேண்டும். மழை மற்றும் புயல் காற்றால் விழுந்துள்ள தென்னை மரங்களுக்கும், பாதிக்கப்பட்ட பிற பயிர்களுக்கும் உரிய இழப்பீட்டை வழங்கவும் புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- லண்டனில் இருந்து சென்னை திரும்பிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.
- அரசியலுக்கு வந்துள்ள உச்ச நட்சத்திரமான விஜயை வரவேற்கிறேன்.
லண்டனில் 3 மாத கால படிப்பை முடித்துவிட்டு சென்னை வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
லண்டன் சென்று படிப்பதற்கு அனுமதி அளித்த பாஜகவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இந்தியாவின் மீது அறிஞர்கள் வைத்துள்ள மரியாதையை லண்டனில் கண்கூடாக பார்க்க முடிந்தது.
அரசியலுக்கு வந்துள்ள உச்ச நட்சத்திரமான விஜயை வரவேற்கிறேன்.
தவெக தலைவர் விஜய் தனது கருத்துகளை மக்கள் முன்பு வைக்கும்போது நாங்களும் கருத்து கூறுவோம். விஜயை கேள்வி கேட்கும் நேரத்தில் நாங்கள் நிச்சயமாக கேள்வி கேட்போம்.
விஜயின் சித்தாந்தங்கள் திராவிட கட்சிகளை போன்று தான் உள்ளது. தவெக மாநாட்டுக்குப் பின் எத்தனை முறை விஜய் வெளியே வந்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜியை கொண்டாடுவது ஆச்சரியம் அளிக்கிறது. சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியை தியாகி போல் கொண்டாடுவதா ?
துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயமாக பாராட்டுவோம்.
2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் நிச்சயமாக சரித்திர தேர்தலாக இருக்கும்.
தமிழக பாஜகவில் கடந்த 3 மாதமாக நிறைய வேலைகள் நடந்துள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சென்னையில் 9 லட்சத்து 10 ஆயிரம் உணவு பொட்டலங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
- மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்ட பின்பு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.
சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் புயல், மழை வெள்ள பாதிப்பு பணிகள் குறித்து அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், சேகர்பாபு, உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
அதிகளவில் மழை பெய்த மாவட்டங்களின் கலெக்டர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பாதிப்பு குறித்து கலெக்டர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
முதலமைச்சருடன் அமைச்சர்கள் பொன்முடி, செந்தில்பாலாஜி, சிவசங்கர் உள்ளிட்டோரும் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனை மேற்கொண்ட பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சென்னையில் 32 நிவாரண முகாம்களில் 1,018 பேர் தங்க வைக்கப்பட்டு அனைத்து தேவையும் செய்து கொடுக்கப்பட்டன.
* சென்னையில் 9 லட்சத்து 10 ஆயிரம் உணவு பொட்டலங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
* புயல் கரையை கடந்த நிலையில் மழை வெள்ள மீட்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* எதையும் எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது.
* வரலாறு காணாத மழையால் விழுப்புரம் மீட்பு பணியில் அமைச்சர் பொன்முடியுடன் செந்தில் பாலாஜி, சிவசங்கர் இணைந்துள்ளனர்.
* மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
* புயல், மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தவற்காக மத்திய அரசு குழுவை அனுப்ப வேண்டும்.
* மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்ட பின்பு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.
* புயல் மற்றும் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பயிர் பாதிப்பு குறித்து கணக்கிட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும் என்று கூறினார்.
- வருகிற 5-ந்தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினம்.
- சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லத்தில் இருந்து ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தப்படும்.
சென்னை:
அ.தி.மு.க. உரிமை மீட்பு குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்பதற்கேற்ப, மக்களுக்கான நலத் திட்டங்களை வழங்கி கண் இமை போல் மக்களைக் காத்து தன்னையே தமிழ்நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்து, தமிழ்நாட்டு மக்களுக்கு பொற்கால ஆட்சியை வழங்கி, இன்றளவும் மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. நிரந்தரப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மாவுக்கு 8-ம் ஆண்டு நினைவு நாளான 05-12-2024 (வியாழக்கிழமை) காலை 10-30 மணியளவில் சேப்பாக்கம், அரசு விருந்தினர் இல்லத்திலிருந்து ஊர்வாமாக புறப்பட்டு சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள புரட்சித் தலைவி அம்மாவின் நினைவிடத்தில் கழக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்துவார்.
இதன் தொடர்ச்சியாக, தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்துவார்கள். இதனைத் தொடர்ந்து, நினைவிட வளாகத்தில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்படும்
மேற்படி நிகழ்ச்சியில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி பகுதி வட்ட கிளை அளவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி கொண்டிருக்கும் நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு அம்மா அவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கொளத்தூரில் உள்ள பெரியார் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
- அதிகளவு மழை பெய்த விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு மூத்த அதிகாரிகள், உயரதிகாரிகள் விரைந்துள்ளனர்.
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் சென்னை கொளத்தூர் தொகுதியில் மழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர்.
செல்விநகர் நீர் உந்து நிலையத்தில் ஆய்வு நடத்திய முதலமைச்சர், அப்பகுதி மக்களிடம் மழைநீர் நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகளின் இருப்பு குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
கொளத்தூர் சீனிவாச நகர் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களின் வருகைப்பதிவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.
இதையடுத்து கொளத்தூரில் உள்ள பெரியார் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் சிகிச்சை முறை குறித்து அவர் கேட்டறிந்தார்.
இந்நிலையில் கொளத்தூரில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டை நாங்கள் மதிப்பதுமில்லை; கவலைப்படுவதும் இல்லை.
* அதிகளவு மழை பெய்த விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு மூத்த அதிகாரிகள், உயரதிகாரிகள் விரைந்துள்ளனர்.
* மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக துணை முதலமைச்சர் உதயநிதியை அனுப்பி உள்ளேன்.
* தலைநகரம் நிம்மதியாக இருக்கிறது.
* வானிலையை ஓரளவுக்குத்தான் கணிக்க முடியும். புயலின் வேகம் குறைந்து ஒரே இடத்தில் நிற்பதை எப்படி கணிப்பது? திடீரென மாறி விடுகிறது.
* வானிலை மையம் கொடுக்கும் தகவல் அடிப்படையில்தான் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்