என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ராமநாதபுரம்
- போலீசார் லாரியில் சோதனை செய்தபோது அதில் சுமார் 3 யூனிட் ஆற்று மணல் இருந்தது தெரிய வந்தது.
- தப்பியோடிய 3 பேரையும் போலீசார் பிடித்தனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் பகுதியில் மணல் கடத்தல் தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகை ராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன், ஏட்டு ராஜா ஆகியோர் ராமநாதபுரம் நீலகண்டி ஊரணி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனையிடுவதற்காக தடுத்து நிறுத்தினர்.
ஆனால் அந்த வாகனம் நிற்காமல் அந்த இடத்தை மின்னல் வேகத்தில் கடந்து சென்றது. சற்று தூரம் தள்ளி லாரி நின்றதும் அதிலிருந்த 3 பேரும் கீழே குதித்து தப்பி ஓடினர். தொடர்ந்து போலீசார் லாரியில் சோதனை செய்தபோது அதில் சுமார் 3 யூனிட் ஆற்று மணல் இருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து தப்பியோடிய 3 பேரையும் போலீசார் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் லாரி டிரைவரான முதலூர் வடக்கு தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 32), லோகநாதன் என்ற கபில் (27), மதுரசேகர் (31) ஆகிய 3 பேரும் உரிய அனுமதியின்றி மணல் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த மணல் கடத்தலுடன் தொடர்புடைய முதலூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு ராமசாமி, அவரது மகன் மனோஜ், கார்த்திக், கந்தபாண்டி, விக்னேஷ், கபில், ராமர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் பஜார் போலீசாரின் இந்த துரித நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
- கடந்த 4 நாட்களாக ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
- ராமேசுவரம், பாம்பன் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்து கடற்கரையில் ஆக்ரோஷமாக மோதின.
மண்டபம்:
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு குறிப்பாக 7 மாவட்டங்களில் இன்று 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே புயல் கரையைக் கடக்கும் நிலையில் 95 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் கடலோர பகுதிக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தி உள்ளது.
வங்கக் கடலில் உருவான புயல் சின்னத்தால் கடந்த 4 நாட்களாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
ராமேசுவரம், பாம்பன் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்து கடற்கரையில் ஆக்ரோஷமாக மோதின.
இதில் பாம்பன் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
பாம்பன் தெற்குவாடி, லைட்ஹவுஸ் தெரு கடலோரத்தில் உள்ள மீனவர் குடிசை வீடுகள், அலைகளால் மோசமாக சேதமாகியது.
வங்கக் கடலில் உருவான புயலால் நேற்று மதியம் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதையடுத்து பாம்பன் கடற்கரையில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தவும், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
ஏற்கனவே கடந்த 24-ந்தேதி முதல் ராமேசுவரம் தீவு பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன் வளத்துறையினர் தடை விதித்தனர். அந்தத் தடை இன்றுவரை நீடித்து வருகிறது. இன்று புயல் கரையை கடக்கும் பட்சத்தில் நாளை மண்டபம் மற்றும் பாம்பன் தெற்கு பகுதியில் மீனவர்கள் கடற்கரை செல்ல அனுமதி வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
மீன் பிடிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளதால் ராமேசுவரம், பாம்பன் மண்டபம் பகுதியில் சுமார் 1,600 விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு உள்ளன.
பெஞ்சல் புயல் எதிரொலியாக கடந்த ஒரு வார காலமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
- கடலின் நடுவே 101 தூண்கள் கட்டப்பட்டு செங்குத்தாக லிப்ட் முறையில் பாலம் வடிவமைக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.
- தெற்கு ரெயில்வே பாதுகாப்பு துறை ஆணையர் சவுத்ரி இந்திய ரெயில்வே வாரிய செயலாளருக்கு ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் புதிய ரெயில்வே பாலம் கட்ட ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. இதையடுத்து சுமார் 2 கி.மீ. தூரம் ரூ.535 கோடி செலவில் ரெயில் விகாஸ் நிகம் லிமிடெட் நிறுவனம் கட்டுமான பணியை தொடங்கியது. கடலின் நடுவே 101 தூண்கள் கட்டப்பட்டு செங்குத்தாக லிப்ட் முறையில் பாலம் வடிவமைக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பாலத்தை ஆய்வு செய்த தெற்கு ரெயில்வே பாதுகாப்பு துறை ஆணையர் சவுத்ரி இந்திய ரெயில்வே வாரிய செயலாளருக்கு ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
அந்த ஆய்வறிக்கையில்," பாலம் சிறு தொழில்நுட்பக் கோளாறுகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பாலத்தில் கடல் நீர் அரிப்பு பிரச்சனையை தீர்க்க முறையான நடவடிக்கை இல்லை.
தூண்களில் தற்போதே அரிப்பு ஏற்பட தொடங்கியுள்ளதாகவும், சோதனை ஓட்டத்தில் தண்டவாளத்தில் ஒலி அதிகமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
புதிய ரெயில் பாலத்தில் உள்ள குறைபாடுகளை முழுமையாக மாறு ஆய்வு செய்து சரிசெய்ய வேண்டும்" எனவும் ஆய்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாம்பன் புதிய ரயில் பாலத்தின் தரத்தை முழுமையாக உறுதி செய்த பின்னரே திறக்க வேண்டும் என மத்திய ரெயில்வே துறை அமைச்சருக்கு ராமநாதபுரம் தொகுதி எம்.பி., நவாஸ் கனி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
தெற்கு ரெயில்வேயின் மூத்த அதிகாரி சவுத்ரி, பாம்பனில் புதிதாக கட்டப்படும் ரெயில்வே பாலத்தின் தரம் குறித்த தனது கருத்து மற்றும் பரிந்துரைகளை இந்திய ரெயில்வேக்கு அனுப்பியிருப்பதை நான் புரிந்துகொண்டேன்.
அவரது கண்காணிப்பின் பேரில் கீழே உள்ள முக்கிய பகுதிகளுக்கு பரிந்துரைத்துள்ளார். பாலம் கட்டும் போது அரிப்பு தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இப்போது சில தூண்கள் மற்றும் மூட்டுகளில் கடல் அரிப்புக்கான அறிகுறிகள் உள்ளன.
மேலும், ரெயில் பாதையை கடந்து செல்லும் போது பெரும் சத்தம் ஏற்படுகிறது. வேலை கிட்டத்தட்ட முடிந்து, ரெயிலின் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. ஆனால் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் எதிர்வரும் நாட்களில் பாலத்தை பயன்படுத்தவிருக்கும் பல லட்சம் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பாலம் பொது பயன்பாட்டிற்கு திறக்கப்படுவதற்கு முன்பு, தெற்கு ரெயில்வே பாதுகாப்பு துறை ஆணையரின் அனைத்து ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் கவனிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறுகிறது.
- அக்னிதீர்த்தக்கடல் பகுதியில் கடல் நீர்மட்டம் உயர்ந்தது.
மண்டபம்:
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறுகிறது. வட கிழக்கு பருவ மழையுடன் புயலும் சேர்ந்ததால் தமிழகம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
குறிப்பாக கடலோர மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் மேக வெடிப்பு காரணமாக ஒரே நாளில் 44 செ.மீ. மழை பதிவானது.
ராமேசுவரத்தை புரட்டிப்போட்ட இந்த மழை பாதிப்பில் இருந்து மக்கள் சற்று மீண்டு வந்த நிலையில், புயல் சின்னம் காரணமாக நேற்று முதல் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது.
வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை எதிரொலியாக பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் மீன்பிடி இறங்குதளங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.
கடுமையான பனி மூட்டத்துடன் பலத்த மழையும் பெய்து வருவதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீடுகளுக்குள் முடங்கினர். சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடியது.
அரிச்சல் முனை, தனுஷ்கோடி, முகுந்தராயர்சத்திரம், கோதண்டராமர் கோவில், ராமர்பாதம், பாம்பன் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்தது.
குந்துகால் முதல் குரு சடைதீவு வரையில் இயக்கப்படும் சுற்றுலா படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. அக்னிதீர்த்தக்கடல் பகுதியில் கடல் நீர்மட்டம் உயர்ந்தது.
தனுஷ்கோடி, குந்துகால் கடல் பகுதி, பாம்பன் ஆகிய இடங்களில் அலைகளின் சீற்றம் மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்டது. அதிலும் பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் பல மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுந்து தாக்கியது.
சேராங்கோட்டை கடற்கரை பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டதால் கரையில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப் படகுகள் மீண்டும் கடலில் இழுக்கப்பட்டன. அத்துடன் கடற்கரையை ஒட்டிய மீனவர் குடியிருப்புகளையும் கடல் நீர் சூழ்ந்தது. இதனால் அங்கு வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் புயலால் ராமேசுவரம் கடலில் இன்று மணிக்கு 55 முதல் 63 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக் கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதற்கேற்க இன்று காலை முதலே பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் 60 கி.மீ. வேகத் தில் சூறாவளி காற்று வீசியது. தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் கடற்கரை வெறிச்சோடியது. நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 54 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
- மரங்கள் முறிந்து மின்தடையும் ஏற்பட்டது.
- மாவட்டத்தின் மொத்த மழை அளவு 542.10 மி.மீட்டர் ஆகும்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த வாரம் கனமழை கொட்டி தீர்த்தது. ராமேசுவரத்தில் மட்டும் 44 செ.மீட்டர் மழை பதிவானது.
இந்த நிலையில் வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது.
ராமநாதபுரம் நகரில் நேற்று காலை முதல் இன்று காலை வரை தொடர்ந்து சாரல் மழையும், அவ்வப்போது மிதமான மழை பெய்தது. இதனால் நகர், புறநகர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதேபோல் மாவட்டத்தில் மண்டபம், தங்கச்சிமடம், ராமேசுவரம், பாம்பன், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கியது. சில இடங்களில் மரங்கள் முறிந்து மின்தடையும் ஏற்பட்டது.
கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தொடர் கனமழையால் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.
கடலோர பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசுகிறது. ரோடுகள் சேறும் சகதியுமாகியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். மழைகால காய்ச்சல், தலைவலி, இருமல் என பல்வேறு நோய்களுக்கு ஆளாகி பொதுமக்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை நோக்கி படையெடுக்க தொடங்கிவிட்டனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ராமநாதபுரம்-22, மண்டபம்-44.80, ராமேசுவரம்-48, பாம்பன்-46.10, தங்கச்சி மடம்-62.20, பள்ள மோர்குளம்-15.20, திருவாடானை-37, தொண்டி-34.60, வட்டாணம்-45.20, தீர்த்தண்டதானம்-48.60, ஆர்.எஸ்.மங்கலம்-29, பரமக்குடி-25.40, முதுகுளத்தூர்-18, கமுதி-26, கடலாடி-20, வாலி நோக்கம்-20.
மாவட்டத்தின் மொத்த மழை அளவு 542.10 மி.மீட்டர் ஆகும்.
இன்றும், நாளையும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. குறிப்பாக தேவகோட்டை, காரைக்குடி, சிவகங்கை நகர் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
கனமழை எச்சரிக்கையால் சிவகங்கை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
- கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் விசைப்படகு மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை.
- மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் அதனை நம்பியுள்ள ஏராளமானோர் வேலையிழந்து உள்ளனர்.
மண்டபம்:
இலங்கை கடலோர பகுதியில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதிதாக உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதற்கிடையே இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ராமேசுவரம் மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி இலங்கை கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்ட லம் உருவாகி இருக்கிறது. இதன் எதிரொலியாக அதிக கனமழையும், மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகம் வரை பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும்.
இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடல் பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து மீன்பிடி படகுகளும் கரைக்குத் திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளன. மீனவர்கள் விசைப்படகுகளை ஒன்றுக்கொன்று இடைவெளி விட்டு நங்கூரமிட்டு நிறுத்தவும் நாட்டுப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தவும் மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் விசைப்படகு மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதையடுத்து மீனவர்கள் தங்களது படகுகளை கரை பகுதியிலும், கடலிலும் போதிய இடைவெளியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்த அறிவிப்பினை மீறி கடலுக்கு செல்லும் மீனவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் அதனை நம்பியுள்ள ஏராளமானோர் வேலையிழந்து உள்ளனர். கடற்கரை பகுதியும் வெறிச்சோடி காணப்பட்டது.
- மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்துள்ளது கடலுக்கு நடுவே வீடு கட்டியது போல காட்சி அளிக்கிறது.
- வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் 3 நாட்களாக தவிப்பதாகவும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. ராமேசுவரத்தில் ஒரே நாளில் 44 செ.மீ மழை பதிவானது. ராமநாதபுரம் நகரிலும் விடாது பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட கஜினி நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் அந்த பகுதியில் இடுப்பளவு மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்துள்ளது கடலுக்கு நடுவே வீடு கட்டியது போல காட்சி அளிக்கிறது.
வீடுகளை மழை நீர் வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் 3 நாட்களாக தவிப்பதாகவும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தனர். இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப கூட முடியவில்லை. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடமும் சக்கரக்கோட்டை ஊராட்சி நிர்வாகத்திடமும் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி அந்த குடியிருப்பு வாசிகள் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மாவட்ட நிர்வாகமும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து உடனடியாக தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ராமேசுவரத்தில் 69 ஆண்டுகளுக்கு பிறகு மேகவெடிப்பு காரணமாக 44 செ.மீ. கொட்டித் தீர்த்தது.
- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களில் இன்னும் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது.
ராமநாதபுரம்:
வளிமண்டல சுழற்சி காரணமாக ராமநாதபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. அதிலும் குறிப்பாக தீவு பகுதியான ராமேசுவரத்தில் 69 ஆண்டுகளுக்கு பிறகு மேகவெடிப்பு காரணமாக 44 செ.மீ. கொட்டித் தீர்த்தது.
நேற்று இரண்டாவது நாளாகவும் மாவட்டம் முழுவதும் 329 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களில் இன்னும் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது.
வரலாறு காணாத இந்த மழைப்பொழிவு காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் அருகே உள்ள வண்ணாங்குண்டு, பத்ராதரவை உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் பயிரிடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் விவசாய நிலங்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் முயற்சிக்கு அடுத்தடுத்த நாட்களும் பெய்த மழை தடை போட்டது. இதனால் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். தொடர்ந்து இனியும் மழை பெய்தால் தாங்க முடியாத நிலை ஏற்படும் என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
இதேபோல் ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 2 நாட்களாக பெய்த கனமழையால் அங்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அதனை அப்புறப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இருந்தபோதிலும் சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளனர்.
நேற்று முழங்கால் அளவுக்கு தேங்கிய மழைநீரில் நடந்து செல்ல முடியாமல் சிகிச்சைக்கு வந்த பலர் திரும்பிச் சென்றனர். அத்துடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகப் பகுதியில் உள்ள அம்மா உணவகம் பகுதிக்கு செல்ல கூட முடியாத அளவுக்கு மழை நீர் அம்மா உணவகம் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு அலுவலர்கள் தங்கும் கட்டிடம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்திருந்தது. மேலும் ராமநாதபுரம் நகரில் கடந்த இரு தினங்களாக கொட்டி தீர்த்த கனமழையால் நகர் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இதற்கிடையே ராமேசுவரத்தில் நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் பெய்த பலத்த மழையால் அனைத்து பகுதிகளும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். குறிப்பாக கோவில் ரதவீதிகள், ராமர் தீர்த்தம் செல்லும் பகுதியில் உள்ள குடியிருப்புகள் ஆகிய இடங்களிலும் தற்போது வரை தண்ணீர் வடியாமல் தேங்கியுள்ளது.
அத்துடன் ராமேசுவரம் தீவு பகுதியில் உள்ள ஆரம்ப, நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரால் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்களின் நலன் கருதி ராமேசுவரத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.
- மேக வெடிப்பு ஏற்பட்டு அதிகன மழை கொட்டுகிறது.
- மழைநீர் குளம்போல் தேங்கி பொதுமக்கள் அவதி.
ராமநாதபுரம்:
வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு தொடங்கி இன்று காலை வரை விட்டுவிட்டு கனமழை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் இருக்கக் கூடிய தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்தனர்.
குறிப்பாக ராமநாதபுரம் பேருந்து நிலையம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தங்கப்பா நகர், இளங்கோவடிகள் தெரு, சூரங்கோட்டை, அரண்மனை, வண்டிக்கார தெரு உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் அன்றாட பணிகளுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
தங்கப்பா நகர் பகுதியில் புதிதாக கட்டி திறக்கப்பட்ட சிறுவர் பூங்கா ஒன்று மழை நீரால் முழுவதுமாக மூழ்கியது. அதேபோல் அய்யர் மடம் பகுதியில் உள்ள ஊரணியும், சாலையும் ஒன்றாக சேர்ந்து காணப்படுவதால் அந்த பகுதியில் செல்லக்கூடிய மக்கள் அச்சத்துடனேயே கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய நான்கு பகுதிகளில் வரலாறு காணாத மழையால் இந்த இரண்டு நாட்களில் மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
அதிலும் கடந்த 69 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 1955-ம் ஆண்டுக்கு பிறகு ராமநாதபுரம் மாவடட்த்தில் குறிப்பாக ராமேசுவரத்தில் 30 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகி உள்ளது.
ராமேசுவரம் ராமநாத சுவாமி-பர்வதவர்த்தி அம்பாள் கோவில், உலக பிரசித்தி பெற்ற 3-ம் பிரகாரம், உத்தரகோச மங்கை மங்களநாதர் கோவில்களுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் பக்தர்கள் கோவில்களுக்குள் செல்ல முடியாமல் தவித்தனர். அதிகாரிகள் உடனடியாக அங்கு சென்று பணியாளர்கள் மூலம் மழைநீரை அப்புறப்படுத்தினர்.
அதேபோல் பாம்பன் ரோடு பாலத்தில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு மழை பெய்தது. இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக அந்த பாலத்தில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. இன்று காலையும் தொடர்ந்து அந்த பகுதியில் மழை பெய்து வருகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், இப்படி ஒரு மழையை நாங்கள் வாழ்நாளில் பார்த்தது கிடையாது. பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த மழையானது பெய்துள்ளதாகவும் முறையான வாறுகால்கள் இல்லாததாலேயே இதுபோன்று மழை நீர் தேங்கி நிற்பதாகவும் குற்றம் சாட்டினர்.
குறிப்பாக பல ஊரணிகள் தண்ணீர் வரத்தின்றி வறண்டு காணப்படும் நிலையில் ஒரு சில ஊரணிகள் மட்டும் நிரம்பி வழிகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக வாறுகால்களை தூர்வாரி அந்தந்த குளங்கள் மற்றும் கண்மாய்களுக்கு செல்லக் கூடிய பகுதிகளை கண்டறிந்து சரி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கலாம் என்று கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பெய்த மழையளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
ராமநாதபுரம்-125.60, மண்டபம்-271.20, ராமேசு வரம்-438, பாம்பன்-280, தங்கச்சிமடம்-338.40, பள்ளமோர்க்குளம்-50.70, திருவாடானை-12.80, தொண்டி-7.80, வட்டா ணம்-12.80, தீர்த்தண்ட தானம்-20.20, ஆர்.எஸ்.மங்கலம்-14.90, பரமக்குடி -25.60, முதுகுளத்தூர்-49, கமுதி-49, கடலாடி-73.20, வாலிநோக்கம்-65.60. மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,834.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 114.68 மில்லி மீட்டர் ஆகும்.
மேக வெடிப்பு என்பது ஒரு குறுகிய காலத்தில் ஒரு பெரிய அளவிலான மழைப் பொழிவை குறிக்கிறது. இந்த மேக வெடிப்புகள் மிகவும் அரிதாகவே நிகழ்கிறது.
குறைந்த பரப்பளவில் அதாவது 20 முதல் 30 சதுர கிலோ மீட்டர் வரையிலான இடத்தில் ஒரு மணி நேரத் தில் 10 செ.மீ.க்கு மேல் மழை பதிவானால் அதுவே மேக வெடிப்பு எனப்படுகிறது. சில சமயங்களில் அது ஆலங்கட்டி மழையாகவும், இடியுடன் சேர்ந்த மழையாகவும் கொட்டுகிறது.
நிலத்தில் இருந்து உறிஞ்சப்படும் நீரானது, மேல்நோக்கி செல்லும்போது வெப்பக் காற்றின் அழுத்தம் காரணமாக குறிப்பிட்ட அந்த பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டு அதிகன மழை கொட்டுகிறது.
- தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றும் கனமழை பெய்து வருகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் நேற்று இரவு வரை இடைவிடாது கனமழை கொட்டியது. குறிப்பாக ராமேசுவரத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய கனமழை பெய்து கொண்டே இருந்தது. நேற்று காலையிலும் மழை பெய்தது. இந்த மழை அவ்வப்போது சாரல் மழையாகவும், திடீரென கனமழையாகவும் என மாறி மாறி பெய்து கொண்டே இருந்தது.
நேற்று திடீரென ராமேசுவரத்தில் அதிகனமழை பெய்யத்தொடங்கியது. இந்த கனமழை ராமேசுவரம் நகர சாலைகள் வெள்ளக்காடாக மாறின. தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.
ராமேசுவரத்தில் மேக வெடிப்பு காரணமாகவும், அதிகனமழையாலும் நேற்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை என 10 மணி நேரத்தில் மட்டும் சுமார் 411 மில்லி மீட்டர் மழை (41.1 சென்டி மீட்டர்) பதிவாகியது. இது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச மழைப்பொழிவு ஆகும்.
கனமழை காரணமாக நேற்று ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் விடுமுறை அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றும் கனமழை பெய்து வருகிறது.
இதையடுத்து ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமையாசிரியர் முடிவு செய்யலாம் என்று அம்மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.
கனமழை பெய்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சூழலுக்கு ஏற்ப தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
- தென் தமிழக கடலோர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
- மிகக் குறுகிய இடத்தில் உருவான வலுவான மேகக் கூட்டங்கள் காரணமாக மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
வங்கக்கடலில் வருகிற 23-ந்தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. இதையொட்டி தென் தமிழக கடலோர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் நேற்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை 19 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மிகக் குறுகிய இடத்தில் உருவான வலுவான மேகக் கூட்டங்கள் காரணமாக மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்தது.
அதே சமயம் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி 28 செ.மீ. அதிகனமழை கொட்டித் தீர்த்துள்ளது என்று வெதெர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இதனிடையே ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
அதிகபட்சமாக தங்கச்சி மடத்தில் 338.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ராமநாதபுரம்- 125.60, மண்டபம் 271.20, ராமேஸ்வரம் 438.00, பாம்பன் 280.00, திருவாடனை 12.80, தொண்டி 7.80, ஆர்.எஸ்.மங்கலம் 14.90, பரமக்குடி 25.60, மொடக்குறிச்சி 49.00, கமுதி 49.00, கடலாடி 73.20.
- ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 3 மணிநேரத்தில் 19 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
- தென் தமிழக கடலோர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது
வங்கக்கடலில் வருகிற 23-ந்தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. இதையொட்டி தென் தமிழக கடலோர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை 19 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மிகக் குறுகிய இடத்தில் உருவான வலுவான மேகக் கூட்டங்கள் காரணமாக மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதே சமயம் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மாலை 5.30 மணி நிலவரப்படி 28 செ.மீ. அதிகனமழை கொட்டித் தீர்த்துள்ளது என்று வெதெர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே ராமநாதபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிக்கு வானிலை ஆய்வு மையம் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்திருந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்