மொபைல்ஸ்

வேற லெவல் அம்சங்களுடன் விவோ X200 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்

Published On 2024-12-13 07:16 GMT   |   Update On 2024-12-13 07:16 GMT
  • இரு மாடல்களிலும் 90 வாட் சார்ஜிங் வசதி உள்ளது.
  • இரு மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த கஸ்டம் ஓஎஸ் உள்ளது.

விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது X200 மற்றும் X200 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. இதில் விவோ X200 மாடலில் 6.67 இன்ச் 1.5K 120Hz LTPS ஸ்கிரீன், X200 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் 1.5K 120Hz AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.

இரு மாடல்களிலும் மீடியாடெக் டிமென்சிட்டி 9400 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 15 வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர நான்கு ஓஎஸ் அப்டேட்கள், ஐந்து ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்டுகிறது. இரு மாடல்களிலும் IP68+IP69 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

 


புகைப்படங்களை எடுக்க விவோ X200 மாடலில் 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 50MP டெலிபோட்டோ கேமரா மற்றும் 32MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. விவோ X200 ப்ரோ மாடலில் 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 200MP டெலிபோட்டோ கேமரா மற்றும் 32MP செல்பி கேமரா உள்ளது.

பேட்டரியை பொருத்தவரை விவோ X200 மாடலில் 5800 எம்ஏஹெச், விவோ X200 ப்ரோ மாடலில் 6000 எம்ஏஹெச் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் 90 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. விவோ X200 ப்ரோ மாடலில் மட்டும் கூடுதலாக 30 வாட் வயர்லெஸ் ஃபிளாஷ் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய விவோ X200 மாடல் நேச்சுரல் கிரீன், காஸ்மோஸ் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 65 ஆயிரத்து 999 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 71 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

விவோ X200 ப்ரோ மாடல் டைட்டானியம் கிரே மற்றும் காஸ்மோஸ் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 94 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களின் விற்பனை டிசம்பர் 19 ஆம் தேதி துவங்குகிறது. 

Tags:    

Similar News