புதிய கேஜெட்டுகள்

நத்திங் போன் 2a பிளஸ் கம்யூனிட்டி எடிஷன் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Published On 2024-10-31 09:35 GMT   |   Update On 2024-10-31 09:35 GMT
  • ஸ்மார்ட்போனின் பேக் பேனலை இருள் சூழ்ந்த பகுதிகளில் ஒளிர செய்யும்.
  • ஸ்மார்ட்போனின் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

நத்திங் நிறுவனத்தின் போன் 2a பிளஸ் கம்யூனிட்டி எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இது போன் 2a பிளஸ் மாடலை போன்ற டிசைன் மற்றும் அம்சங்களை கொண்டுள்ளது. எனினும், இதன் அம்சங்களை நத்திங் கம்யூனிட்டி உருவாக்கி இருக்கிறது.

இதில் உள்ள அம்சங்கள் உலகின் 47 நாடுகளை சேர்ந்தவர்கள் கடந்த ஆறு மாதங்களில் சமர்பித்த 900-க்கும் அதிக பரிந்துரைகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளன. கம்யூனிட்டி எடிஷன் மாடலில் கிரீன்-டின்ட் செய்யப்பட்ட பாஸ்போரசென்ட் மெட்டீரியல் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் பேக் பேனலை இருள் சூழ்ந்த பகுதிகளில் ஒளிர செய்யும்.

 


இந்த ஸ்மார்ட்போன் கம்யூனிட்டி உருவாக்கிய ஆறு வால்பேப்பர்களுடன் வருகிறது. இதன் பாக்ஸில் நத்திங் டிசைன் மொழி பின்பற்றப்பட்டு இருக்கிறது. இவைதவிர ஸ்மார்ட்போனின் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

புதிய நத்திங் போன் 2a பிளஸ் கம்யூனிட்டி எடிஷன் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் உலகம் முழுக்க வெறும் 1000 யூனிட்கள் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

Tags:    

Similar News