புதிய கேஜெட்டுகள்

10 நிமிட சார்ஜில் 150mins பிளேடைம்.. குறைந்த விலையில் புது இயர்பட்ஸ் அறிமுகம் - எந்த மாடல்?

Published On 2024-11-14 09:56 GMT   |   Update On 2024-11-14 09:56 GMT
  • 45 மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்குகிறது.
  • இதில் இன்ஸ்டா சார்ஜ் தொழில்நுட்பம் உள்ளது.

நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய குறைந்த விலை இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. சமீபத்தில் நாய்ஸ்ஃபிட் டிவா 2 ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இன்-இயர் ரக மாடலான புதிய நாய்ஸ் பட்ஸ் ட்ரூப்பர் 13 மில்லிமீட்டர் டிரைவர்கள், குவாட் மைக் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இதில் உள்ள தனித்துவ வைசர் டிசைன், அசத்தலான எல்இடிக்கள் உள்ளன. இவை கேமிங் வைப் கொடுப்பதோடு 45 மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்குகிறது.

 


மேலும் இதில் உள்ள இன்ஸ்டா சார்ஜ் தொழில்நுட்பம் மூலம் இந்த இயர்பட்ஸ்-ஐ பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 150 நிமிடங்கள் வரை பயன்படுத்த முடியும். இதில் உள்ள ஹைப்பர் சின்க் கனெக்ஷன் அதிவேக கனெக்விட்டியை உறுதிப்படுத்துகிறது. மேலும் 40ms வரை லோ லேடன்சி மற்றும் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி உள்ளது.

புதிய நாய்ஸ் பட்ஸ் ட்ரூப்பர் மாடல் நைட் பிளாக், மைட்டி வைட், ஃபியெரி எல்லோ மற்றும் ஸ்டார்ம் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை நாய்ஸ் மற்றும் அமேசான் வலைதளங்களில் நடைபெறுகிறது. 

Tags:    

Similar News