என் மலர்
மேஷம் - வார பலன்கள்
மேஷம்
வார ராசிபலன் 15.12.2024 முதல் 21.12.2024 வரை
15.12.2024 முதல் 21.12.2024 வரை
நன்மைகள் மிகுந்த வாரம் .பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம். ஒருவரின் வருமானத்தில் தள்ளாடிய குடும்பம் அனைத்து குடும்ப நபர்களின் வருமானத்தில் தலை நிமிர்ந்து நிற்கும். அடிப்படை தேவைக்கு திணறியவர்களுக்கும் சரளமான பணப்புழக்கம் ஏற்படும். கலைத்துறையினருக்கு இது சிறப்பான காலமாகும். அரசு வேலை கிடைக்கும். தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். மூத்த சகோதர வழி ஆதாயம் உண்டு. ஏதேனும் போட்டி பந்தயங்களில் கலந்து கொண்டால் வெற்றி நிச்சயம்.
காதல் திருமண முயற்சி பலன் தரும் குழந்தை பாக்கியம் சித்திக்கும். சிலருக்கு அதிர்ஷ்ட பணம், பொருள், உயில் சொத்து கிடைக்கலாம். பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை இரட்டிப்பாகும். உங்களை சோர்வடையச் செய்த வம்பு, வழக்குகள் சாதகமாகும்.பிதுர் வழி சொத்துக்கள் தொடர்பான மனக்குழப்பம் சஞ்சலம் சீராகும். உங்களின் திறமையும் பேச்சு சாதுர்யமும் பல இடங்களில் கை கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் செல்வாக்கு உயரும். தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 8.12.2024 முதல் 14.12.2024 வரை
8.12.2024 முதல் 14.12.2024 வரை
தடைகள் விலகி மாற்றம் உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் வக்ரம் பெறுவதால் நீச்ச பங்க ராஜயோக நிலையை அடைகிறார். கடின உழைப்பு, விடா முயற்சியால், வைராக்கியத்தால் தடைகளை கடந்து வெற்றி வாகை சூடுவீர்கள். கண்டும் காணாமல் இருந்த உறவுகள் வலிய வந்து பேசுவார்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பு கொடுப்பார்கள். காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறமை அதிகரிக்கும். வீண் செலவு குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். நிதானமாக செயல்பட்டால் அரசு வகையில் யாவும் அனுகூலமாகும்.
தொழில் ரீதியான பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப் படுத்தும். சிலருக்கு குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் அதிகரிக்கும். வீடு, வாகனம், திருமணம் போன்ற சுப செலவிற்காக கடன் வாங்கலாம். சீருடைப் பணியாளர்களுக்கு விரும்பிய இடமாறுதல் கிடைக்கும். பெண்களுக்கு மாமனார், மாமியாரால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகரிக்கும். பன்னீர் அபிசேகம் செய்து சிவ வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 1.12.2024 முதல் 7.12.2024 வரை
1.12.2024 முதல் 7.12.2024 வரை
சந்தோஷம் நிறைந்த வாரம். ராசி அதிபதி செவ் வாய் சுக்ரன் பார்வையில் 4ம்மிடமான சுக ஸ்தானத்தில் நீச்சமடைந்து வார இறுதி நாளில் வக்ரமடைகிறார். இதனால் சில நன்மைகளும், மாற்றங்களும் நடக்கும். திருமணம், குழந்தை பேறு, வேலை வாய்ப்பு சொத்துச் சேர்க்கை போன்றவற்றில் நிலவிய தடைகள் அகலும். தேவைக்கேற்ற தன வரவால் குடும்பத்தில் பொரு ளாதார நிலை சிறப்பாக இருக்கும். தாய்வழிச் சொத்து தேடி வரும். பங்குச் சந்தை வர்த்தகத்தை தவிர்க்கவும்.
ஒரு முக்கிய கோரிக்கைக்காக குல தெய்வத்திற்கு வேண்டுதல் வைப்பீர்கள். தொழிலில் போட்டிகள் இருப்பினும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.வெகு விரைவில் ஏழரைச் சனி சனி துவங்க உள்ளதால் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். ஏழரைச் சனி ஆரம்பமாக இருப்பதால் பழைய வேலையில் இருந்து புதிய வேலைக்கு இப்போது முயற்சி செய்ய வேண்டாம். 2.12.2024 அன்று மாலை 3.45 மணி வரை சந்தி ராஷ்டமம் இருப்பதால் சொந்தங்களையும் சுற்றி இருப்பவர்களையும் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. குடும்ப நிர்வாகச் செலவு, வீண் விரயங்கள் அதிகமாகும். முருகன் வழிபாடு நன்மை தரும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 24.11.2024 முதல் 30.11.2024 வரை
24.11.2024 முதல் 30.11.2024 வரை
கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். ராசிக்கு 3,6-ம் அதிபதியான புதன் மற்றொரு மறைவு ஸ்தானமான 8-ம் மிடத்தில் மறைந்து வக்ரமடைவது மேஷத்திற்கு ராஜயோக காலமாகும். தொழிலில் முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நேரமாகும். பொருளாதாரத்தைப் பொறுத்த வரை இனி இல்லை என்ற நிலை இனி இல்லை. தொழில் பங்குதாரர் மற்றும் வாழ்க்கைத் துணையால் ஆதாயம் கிடைக்கும். பெண்கள் கணவரின் தொழில், உத்தியோக உயர்வால் நிம்மதி அடைவார்கள்.பெற்றோருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் மாறும்.
ஆயுள், ஆரோக்கியம் தொடர்பான பய உணர்வு அகலும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கி அல்லது வராக்கடன்கள் வசூலாகும். பிள்ளைகளால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். காதல் திருமணம் சிறு தடைக்குப் பிறகு கைகூடும். 30.11.2024 அன்று காலை 6.02-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிக்கிறது.மனசஞ்சலம் அதிகரிக்கும். சில எதிர்மறை சம்பவம் ஏற்படலாம். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பது மற்றும் விவாதிப்பதையும் தவிர்க்கவும். நவகிரக காயத்திரி மந்திரம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 17.11.2024 முதல் 23.11.2024 வரை
17.11.2024 முதல் 23.11.2024 வரை
இன்னல்கள் குறையும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் ராசிக்கு 8ல் மறைவதால் மறைமுக வருமானம் கூடும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை ஏற்படும்.பிறர் போற்றும் அளவிற்கு உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும் . குடும்பத்தில் நிலவிய குறுக்கீடுகள் அகலும். தடைகள் தகறும். மனதில் நிம்மதி கூடும்.கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும். புதிய முதலீட்டிற்கு தேவையான உதவிகள் கிடைக்கும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
ஆன்மிக தலங்களுக்கு சென்று வருவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும். உயர் கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். சக ஊழியர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். பழைய வாகனங்களை மாற்றுவீர்கள். குழந்தைகளால் அனுகூலம் உண்டாகும். கணவன், மனைவிக்குள் அனுசரித்துச் செல்லவும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தேய்பிறை அஷ்டமியில் துர்க்கையை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிப்பலன் 10.11.2024 முதல் 16.11.2024 வரை
தொழில் முன்னேற்றம் நிறைந்த வாரம். ராசிக்கு 10, 11-ம் அதிபதி சனி பகவான் வக்ர நிவர்த்தி பெறுகிறார். கடின உழைப்பும், விடா முயற்சியும் அனுகூலமான பலன் தரும். வைராக்கியத்துடன் தடைகளை கடந்து வெற்றி வாகை சூடுவீர்கள். தொழிலில் சீரான முன்னேற்றம் இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக முனைப்புடன் விடா முயற்சியுடன் செயல்பட்டால் பெரும் லாபம் கிட்டும். குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் இணையும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஊர் விட்டு ஊர் மாற நேரும். ஒரு சிலர் நாடு விட்டு நாடும் மாறலாம். விரும்பிய பதவி உயர்வு தேடி வரும். பணிச் சுமை கூடும்.
விரும்பிய அப்பார்ட்மென்டில் சொந்த வீடு கிடைக்கும். விண்ணப்பித்த வீட்டு, வாகன கடன் இந்த வாரத்திற்குள் கிடைத்துவிடும். திருமண முயற்சி கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். சனிபகவான் 12-ம் இடமான விரய ஸ்தானத்தை நோக்கி நகர்கிறார். மார்ச் 29-ல் ஏழரைச் சனி ஆரம்பமாகிறது என்பதால் முக்கிய பணிகளில் கவனம் செலுத்தவும். பவுர்ணமி அன்று அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்ளவும்.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 3.11.2024 முதல் 9.11.2024 வரை
3.11.2024 முதல் 9.11.2024 வரை
கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். 3, 6-ம் அதிபதி புதன் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கிறார். புதிய வழியில் சம்பாதிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். வெளி வட்டார தொடர்புகளால் புதிய தொழில் வாய்ப்பு கிடைக்கும்.சிலர் நிலையான நிரந்தரமான தொழில், உத்தியோகத்திற்காக வீடு அல்லது ஊர் மாற்றலாம். குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடை, தாமதம் நீங்கும். நோய் தாக்கம் குறையும். போட்டிகள், பொறாமை, சங்கடங்கள் உள்ளிட்ட சாதகமற்ற விஷயங்கள் படிப்படியாக குறையும். வெளிநாடு, வெளிமாநில சுற்றுலா பயணம் சிறக்கும்.
மாணவர்கள் சிரத்தையுடன் படிப்பார்கள். நல்ல வசதியான வாடகை வீட்டிற்கு இடம் பெயரும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் விரும்பும் பூமி சகாய விலைக்கு கிடைக்கும். அரசியல் பிரமுகர்கள், அரசாங்க ஊழியர்கள் வம்பு, வழக்கு, சர்ச்சைகளைத் தவிர்க்க வேண்டும். சில இளவயதினர் காதல் வயப்படுவார்கள். திருமணம் கைகூடும். சிலருக்கு வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 5.11.2024 அன்று காலை 9.45 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அஜீரண கோளாறு ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சமயபுர மாரியம்மனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 27.10.2024 முதல் 3.11.2024 வரை
27.10.2024 முதல் 3.11.2024 வரை
எண்ணற்ற புதிய வாய்ப்புகள் தேடி வரும் வாரம். தன ஸ்தானத்தில் நிற்கும் குருபகவான் வக்ர கதியில் சஞ்சாரம் செய்தாலும் தனாதிபதி சுக்ரன் தன் வீட்டைத் தானே பார்ப்பதால் கடின உழைப்பு லாபத்தை ஈட்டித்தரும். தொழிலில் கூட்டாளிகளால் சாதகமான சூழல் ஏற்பட்டு தனலாபம் அதிர்ஷ்டம் அரவணைக்கும். வராக்கடன்கள் வசூலாகும். சமூகச்சேவை புரிபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். சிலர் உத்தியோகத்தில் விருப்ப ஓய்வு பெறலாம். இளம் வயதினருக்கு திருமண முயற்சிகள் வெற்றி தரும்.ஸ்திர சொத்துக்கள் சேரும்.
குடும்ப உறவுகளோடு இருந்து வந்த பிரச்சனைகள் சீராகும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். நன்மைகளே மிகுதியாக நடக்கும், எனினும் யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. தீபாவளி விடுமுறை குதூகலத்தை அதிகரிக்கும்.2.11.2024 இரவு 11.23க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் இனம்புரியாத கவலை குழப்பம் உண்டாகலாம். வேலையாட்களால், உடன் பணிபுரிபவர்களால் மன சங்கடம் ஏற்படலாம்.எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஸ்ரீ ருத்ரம் கேட்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 20.10.2024 முதல் 26.10.2024 வரை
20.10.2024 முதல் 26.10.2024 வரை
வேகத்துடன், விவேகத்தையும் கடைபிடிக்க வேண்டிய வாரம். ராசி அதிபதி செவ்வாய் நீசம் பெற்று ராசிக்கு 4,7,8ம்மிடங்களை பார்வையிடுகிறார்.எதிலும் நேர்மறை சிந்தனையுடன் இருக்க வேண்டும். பல புதிய மாற்றங்கள் உண்டாகும். வீடு, வேலை மாற்றம் அல்லது திடீர் பயணங்கள் உருவாகும். கடன் தொடர்பான விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். உடன் பிறந்தவர்களுடன் ஏற்பட்ட மனத்தாங்கல் சீராகும். கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் பண்ணையாளர்களுக்கு அமோகமான வருமானம் உண்டு. தற்காலிகப் பணியில் இருப்பவர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.
பருவ வயதினருக்கு திருமண முயற்சிகள் நடக்கும். செவ்வாயின் 8ம் பார்வை சனி மீது பதிவதால் தொழில், உத்தியோகத்தில் சிந்தித்து நிதானத்துடன் செயல்பட வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தீபாவளிக்கு அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு எதிர்பார்த்த குடியுரிமை கிடைக்கும். அரசு ஊழியர்கள் தடைபட்ட பதவி உயர்விற்கு முயற்சிக்கலாம். வழக்குகள், பஞ்சாயத்துகள் சாதகமாகும். தீபாவளி போனஸ் அரியர் சம்பளத்துடன் கிடைக்கும். நவகிரக செவ்வாயை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிப்பலன் 13.10.2024 முதல் 19.10.2024 வரை
அமைதி நிறைந்த வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் நீசம் பெற்று ராசியை பார்க்கிறார். நீசம் அடைந்தாலும் சூரியன் ராசியை பார்ப்பது மேஷத்திற்கு நன்மை தரும் அமைப்பாகும். தோற்றப்பொலிவு மற்றும் பழக்கவழக்கங்களில் சிறுசிறு புதுமைகள் ஏற்படும். மனதில் நல்ல எண்ணங்களை உதயமாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். மனதில் ஆடம்பரமான எண்ணங்கள் அதிகரிக்கும்.
தீபாவளி செலவிற்கு தேவையான பணம் தாராளமாக கிடைக்கும். சொத்து விற்பனை மற்றும் சொ்தது வாங்குவதில் லாபம் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். வேலையாட்களை தட்டிக்கொடுத்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். வெளியூர், வெளிநாட்டு பயணங்களில் நிலவிய தடைகள், தாமதங்கள் அகலும். ஆன்மீக நாட்டம் அதிகமாகும். இளைய சகோதரர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். மார்ச் 29, 2025-ல் ஏழரைச் சனி ஆரம்பமாவதால் முக்கிய பணிகளை விரைந்து முடிப்பது நல்லது. திருமணம், குழந்தை பேறில் நிலவிய சங்கடங்கள் சீராகும். பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் 6.10.2024 முதல் 12.10.2024 வரை
6.10.2024 முதல் 12.10.2024 வரை
கடன் பிரச்சனைகள் குறையத் துவங்கும் வாரம்.வார இறுதியில் 6-ம் அதிபதி புதன் உச்ச நிவர்த்தி பெறுகிறார். உச்சம் பெற்ற புதனால் கடந்த சில நாட்களாக கடன் தொல்லை, நோய் தாக்கம் மன உளைச்சலை தந்து இருக்கலாம். உத்தியோக ரீதியான மறைமுக எதிர்ப்புகளை சந்தித்து இருக்கலாம். தற்போது விரய அதிபதி குருவும் வக்ர கதியில் செல்வதால் கடன் சார்ந்த பயம் டென்ஷன் விலக ஆரம்பிக்கும். பழைய பிரச்சனைகள் குறையும். பணி நிமித்தமான புதிய முயற்சிகள் நிறைவேறும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும்.
வெளி வட்டாரங்களில் மதிப்பு உயரும். வியாபார இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். உயர் கல்விகளில் இருந்துவந்த குழப்பம் குறையும்.சொந்த ஊருக்கு சென்று வருவீர்கள். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சி நிறைவேறும். புத்திரப் பிராப்த்தம் உண்டா கும். 6.10.2024 மாலை 5.33 மணி முதல் 9.10.2024 அதிகாலை 4.08 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது. முன்கோபத்தை குறைத்து பொறுமையைக் கடைபிடித்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். காளியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மேஷம்
வார ராசிபலன் (29.9.2024 முதல் 5.10.2024 வரை)
29.9.2024 முதல் 5.10.2024 வரை
விடா முயற்சிகள் வெற்றி தரும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இழுபறியாக இருந்த காரியங்கள் கூட துரித வேகத்தில் நடந்து முடியும். உழைப்பிற் கேற்ற ஊதியம் கிடைக்கும். பொருளாதார பற்றாக்குறை அகலும்.ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றமான காலம். புதிய தொழில் வாய்ப்புகள், முயற்சிகள் மன நிறைவு தரும். அரசு வேலை வாய்ப்பு உறுதி. நீண்ட காலமாக விற்க முடியாத சொத்துக்கள் விற்பனை யாகும். காணாமல் போன ஆவணங்கள், கை மறதியாக வைத்த விலை உயர்ந்த பொருள்கள் கிடைக்கும்.
விரும்பிய கடன் தொகை, பண உதவி நண்பர்கள், நிதி நிறுவனங்கள் மூலம் கிடைக்கும். திருமண வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும்.வீட்டில் சிறுசிறு சுப மங்கல நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். இல்லத்து விசேஷங்களுக்கு பாராமுகம் காட்டிய உறவுகளின் வருகை ஆனந்த கண்ணீரை வரவழைக்கும். காதலர்கள் பெற்றோரின் நல்லாசியுடன் திருமணம் செய்வது உத்தமம். சிறு உடல் உபாதைகள் அவ்வப்போது தோன்றும். மகாளய அமாவாசையன்று பசுவிற்கு அகத்திக்கீரை வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406