என் மலர்
தனுசு
2025 மாசி மாத ராசிபலன்
வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்ளும் தனுசு ராசி நேயர்களே!
மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் வியாழன், பகைக் கிரகமான சுக்ரன் வீட்டில் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கிறார். எனவே நீங்கள் தீட்டிய திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். தெய்வீக சிந்தனை மேலோங்கும்.
கூட்டாக இருந்தவர்கள் தனித்து இயங்க முற்படுவர். கடன் சுமை அதிகரித்து கவலைகள் கூடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மேலிடத்து ஆதரவு குறையும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் என்றாலும், அவற்றை செயல் படுத்த இயலாது. செவ்வாய் வக்ர நிவர்த்திக்கு பிறகு, பிள்ளைகள் வழியில் நல்ல தகவல் கிடைக்கும்.
சூரியன் - சனி சேர்க்கை
இந்த மாதம் முழுவதும் கும்ப ராசியில் சூரியன் - சனி சேர்க்கை ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு 2, 3 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. பாக்கிய ஸ்தானாதி பதியாக விளங்குபவர் சூரியன். இவை ஒன்றாக இணையும் பொழுது நல்ல பலன்கள் உங்களை தேடிவரும்.
இதுவரை நீங்கள் எதிர்பார்த்த கணிசமான தொகைகள், கைகளில் புரளும் வாய்ப்பும் உண்டு. கொடுக்கல் - வாங்கல் சீராகவும், சிறப்பாகவும் அமையும். பணிபுரியும் இடத்தில் பாராட்டும், புகழும் கூடும். பொதுவாழ்வில் எதிர்பார்த்த பொறுப்புகள் வந்துசேரும்.
செவ்வாய் வக்ர நிவர்த்தி
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், மாசி 9-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி வக்ர நிவர்த்தியாவதால் புனித பயணங்கள் அதிகரிக்கும். புகழ்மிக்க புராதன கோவில் களுக்குச் சென்று வழிபட்டு வருவீர்கள். பிள்ளைகள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். அவர்களின் எதிர்கால நலன்கருதி நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு.
குடும்பத்தில் ஒருவருக்கு மேற்பட்டவர்களின் சம்பாத்தியம் கிடைத்து, அதன் மூலம் மகிழ்ச்சி பெருகும். நீண்ட தூர பயணங்கள் பலன் தருவதாக அமையும். வெளிநாட்டில் இருந்து வரும் தகவல் ஆதாயம் தரும். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிக்க எடுத்த முயற்சி வெற்றியாகும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். உடல் நலம் சீராக, மாற்று மருத்துவம் கைக்கொடுக்கும்.
மீன - புதன் சஞ்சாரம்
மாசி 14-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் நீச்சம் பெறுவது யோகம்தான். கல்யாண கனவுகள் நனவாகும். வாழ்க்கை துணையோடு வந்த பிரச்சினை அகலும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பர். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள்.
உள்ளத்தில் உற்சாகம் குடிகொள்ளும். தள்ளிச்சென்ற பல நல்ல வாய்ப்புகள் தானாக வந்து மகிழ்ச்சிப்படுத்தும். 'வெளிநாடு சென்று படிக்க வேண்டும்' என்று நீங்கள் எடுத்த முயற்சிகள், அரைகுறையாக நின்றிருந்தால், அது இப்போது முழுமை அடையும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு ஏற்பட்டு சந்தோசத்தை வழங்கும்.
பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு உயரும். செயல்பாட்டில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவி கிடைக்கும். கலைஞர்களுக்கு திறமையை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் கைகூடிவரும். மாணவ - மாணவிகளுக்கு சிந்தனையில் தெளிவு பிறக்கும். பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை பலப்படும். பணத் தேவை பூர்த்தியாகும்.
பணத்தேவையை பூர்த்தி செய்யும் நாட்கள்:-
பிப்ரவரி: 13, 14, 18, 19, 26, 27, மார்ச்: 2, 3, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.






