என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
ஏப்ரல் இறுதியில் இந்தியா வரும் சிட்ரோயன் எஸ்யுவி
- சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய மிட்சைஸ் எஸ்யுவி மாடல் விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
- புதிய சிட்ரோயன் மிட்சைஸ் எஸ்யுவி மாடல் இருவித இருக்கை அமைப்புகளில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
சிட்ரோயன் நிறுவனத்தின் முற்றிலும் புதிய எஸ்யுவி மாடல் ஏப்ரல் 27 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய எஸ்யுவி குறித்து சிட்ரோயன் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த கார் டிசைன் மற்றும் பொறியியல் பணிகள் முழுக்க முழுக்க இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டது என சிட்ரோயன் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
இந்திய சந்தையில் சிட்ரோயன் நிறுவனத்தின் அடுத்த மாடல் மிட்சைஸ் எஸ்யுவி-ஆக இருக்கும் என ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும் இந்த கார் C3 ஹேச்பேக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. ப்ரோடக்ஷன் வடிவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய எஸ்யுவி மாடல் C3 ஏர்கிராஸ் எனும் பெயர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
புதிய சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் மாடலில் 1.2 லிட்டர் டர்போ, 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் யூனிட் வழங்கப்பட இருக்கிறது. இது அதிகபட்சம் 110 ஹெச்பி பவர், 190 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது. இதே எஞ்சின் தற்போது விற்பனை செய்யப்படும் C3 ஹேச்பேக் மாடலிலும் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கார் இருவித இருக்கை அமைப்புகள்: ஐந்து மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய வகையில் கிடைக்கும். அந்த வகையில், புதிய மாடல் ஹூண்டாய் கிரெட்டா, டொயோட்டா ஹைரைடர் மற்றும் கியா செல்டோஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். இதன் 7 சீட்டர் மாடல் கியா கரென்ஸ், மாருதி சுசுகி XL6 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
Photo Courtesy: Rushlane