என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
புதிதாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யும் டிவிஎஸ் மற்றும் ஹோண்டா
- ஹோண்டா, டிவிஎஸ் நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- பல்வேறு முன்னணி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகன துறையில் களமிறங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய திட்டங்களை மார்ச் 29 ஆம் தேதி அறிவிக்க இருக்கிறது. இதே வரிசையில் டிவிஎஸ் நிறுவனமும் தனது புதிய எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர பிரிவு தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.
ஏத்தர் எனர்ஜி மற்றும் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனங்கள் தொடர்ந்து விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதுதவிர மேலும் பல்வேறு நிறுவனங்கள் புதிதாக எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அடுத்த சில ஆண்டுகளில் மேலும் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகன துறையில் களமிறங்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது. இதுதவிர டிவிஎஸ் நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் மேலும் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. புதிய டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் 5 கிலோவாட் முதல் 25 கிலோவாட் வரையிலான திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது.
இதுதவிர டிவிஎஸ் நிறுவனத்தின் எதிர்கால எலெக்ட்ரிக் வாகனங்கள் முற்றிலும் புதிய பவர்டிரெயின் கொண்டிருக்கும் என காப்புரிமை விண்ணப்பங்களில் தெரியவந்து இருக்கிறது.
ஹோண்டா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விவரங்களை மார்ச் 29 ஆம் தேதி அறிவிக்க இருக்கிறது. புதிய காப்புரிமையில் எலெக்ட்ரிக் மோட்டார், சார்ஜர் மற்றும் பேட்டரி பேக் கண்ட்ரோலர் என பல்வேறு பாகங்களின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
காப்புரிமை வரைபடங்களின் படி இது இ-ஸ்கூட்டராக இருக்கும் என தெரிகிறது. மேலும் இதில் பேட்டரி பேக் புளோர்போர்டின் கீழ் பொருத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இதன் பின்புறம் ஹப் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஹோண்டா நிறுவனம் கழற்றக்கூடிய பேட்டரி பேக் பயன்படுத்துவது பற்றிய பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களின் படி ஹோண்டா நிறுவனம் தற்போது விற்பனை செய்து வரும் ஆக்டிவா 6ஜி மாடலை எலெக்ட்ரிக் வடிவில் அறிமுகம் செய்யும் என கூறப்பட்டது.