என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோ டிப்ஸ்
கார் என்ஜின் எப்போதும் சீராக இருக்க வேண்டுமா? இதை மட்டும் செய்தாலே போதும்!
- என்ஜினில் உள்ள ஏராளமான பாகங்கள் அசையும் திறன் கொண்டிருப்பதால் லூப்ரிகேஷன் அவசியம்.
- கூலிங் சிஸ்டம் சீராக இயங்க வைக்க கூலனட் சரியான அளவில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
கார்களுக்கு என்ஜின் தான் இதயம் எனலாம். இதனை சரியாக வைத்துக் கொண்டாலே இவற்றில் ஏற்படும் சிக்கல் மற்றும் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். இவ்வாறு என்ஜினை சரியாக பரிமரித்தால், அதன் திறன் சீராக இருப்பதோடு, நீண்ட காலத்திற்கு சிரமம் இன்றி பயன்படுத்த முடியும். அந்த வகையில் கார் என்ஜினை எப்போதும் சீராக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
என்ஜின் ஆயில்:
என்ஜின் பராமரிப்பில் மிக முக்கியமான விஷயம் லூப்ரிகேஷன் தான். என்ஜினில் உள்ள ஏராளமான பாகங்கள் அசையும் திறன் கொண்டிருப்பதால் லூப்ரிகேஷன் அத்தியாவசியமான ஒன்று ஆகும். குறைந்த அளவு என்ஜின் ஆயில் அல்லது பழைய என்ஜின் ஆயில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவை என்ஜினை விரைந்து பாழாக்கி விடும்.
என்ஜின் பாழாகும் பட்சத்தில் அதனை சரியாக சரிசெய்வது மிகவும் கடினம் ஆகும். இவ்வாறு சரி செய்தாலும், பெரும்பாலான சூழல்களில் இவை மீண்டும் மீண்டும் பிரச்சினையை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். இதனை தவிர்க்க என்ஜினுக்கு சீரான இடைவெளியில் ஆயிலை மாற்றுவது நல்லது.
என்ஜின் கூலன்ட்:
இன்டர்னல் கம்பஷன் என்ஜின் அல்லது ஐ.சி. என்ஜின் அதிகளவு வெப்பத்தை வெளிப்படுத்தும். இந்த வெப்பத்தை என்ஜினில் உள்ள என்ஜின் கூலிங் சிஸ்டம் தான் குறைக்கும். கூலிங் சிஸ்டம் சீராக இயங்க வைக்க கூலனட் சரியான அளவில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது என்ஜின் எப்போதும் சீரான வெப்பநிலையில் இருப்பதை உறுதிப்படுத்திவிடும்.
ஏர் ஃபில்ட்டர்:
காரின் மிக முக்கிய பாகங்களில் ஒன்று தான் ஏர் ஃபில்ட்டர். இது காரின் செயல்திறனை நேரடியாக பாதிப்பதோடு, என்ஜினில் வெளிப்புற அம்சங்கள் நுழைந்து ஏற்படுத்தும் பாதிப்புகளை தடுக்கிறது. இதன் காரணமாக ஏர் ஃபில்ட்டரை சீரான இடைவெளியில் மாற்றிக் கொண்டே இருப்பது அவசியம் ஆகும்.
ஆயில் ஃபில்ட்டர்:
தொடர்ச்சியான பயன்பாடு காரணமாக சேகரிக்கப்படும் அழுக்குகளை நீக்கும் பணியை ஆயில் ஃபில்ட்டர் மேற்கொள்கிறது. இதில் பாழாகி போன என்ஜின் ஆயில் சேகரிக்கப்படும். சீரான இடைவெளியில் இதனை அகற்றாத பட்சத்தில் என்ஜினில் கோளாறு ஏற்படும் அபாயம் அதிகம் ஆகும்.
ஆயில் லீக் மற்றும் புகை:
காரினை விரைந்து சரிபார்க்க வேண்டும் என்பதை உணர்த்தும் அபாய எச்சரிக்கை தான் ஆயில் லீக் மற்றும் புகை வெளியீடு. காரில் இந்த பிரச்சினை ஏற்பட்டால், அதனை விரைந்து சரிபார்க்க வேண்டியது அவசியம் ஆகும். இதனை தவிர்க்கும் பட்சத்தில், புதிதாக ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்ய அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்