என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
இந்தியாவில் அறிமுகமான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 130 - விலை ரூ. 1.30 கோடி மட்டுமே!
- லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய டிஃபெண்டர் 130 மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- இந்திய சந்தையில் டிஃபெண்டர் 130 மாடலில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், ஸ்மோக்டு டெயில் லைட்கள் வழங்கப்படுகின்றன.
லேண்ட் ரோவர் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய டிஃபெண்டர் 130 மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டிஃபெண்டர் 130 மாடல் விலை ரூ. 1 கோடியே 31 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த எஸ்யுவி மாடல் HSE மற்றும் X என இரண்டு வேரியண்ட்களில், இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
புதிய லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 130 மாடல் 3.0 லிட்டர், ஆறு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 394 ஹெச்பி பவர், 550 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் டீசல் என்ஜின் 296 ஹெச்பி பவர், 600 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இரு வேரியண்ட்களிலும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் மற்றும் ஆல்-வீல் டிரைவ் வசதி வழங்கப்படுகிறது.
110 மாடலுடன் ஒப்பிடும் போது புதிய டிஃபெண்டர் 130 மாடலின் நீளம் 340mm ஆக நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதன் வீல்பேஸ் இரண்டு வேரியண்ட்களிலும் ஒரே மாதிரியாக வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்கள், ஸ்மோக்டு டெயில் லைட்கள், 20 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், ஃபுல் சைஸ் ஸ்பேர் வீல் வழங்கப்படுகிறது.
காரின் உள்புறம் பானரோமிக் சன்ரூஃப், 11.4 இன்ச் பிவி ப்ரோ டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, HUD சரவுண்ட் வியூ கேமரா, மெரிடியன் மியூசிக் சிஸ்டம், 4-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், லெதர் இருக்கை மேற்கவர்கள், செண்டர் கன்சோல், 14 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்புற இருக்கைகள், ஹீடிங் மற்றும் கூலிங் அம்சங்கள் வழங்கப்படுகிறது.