search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    ஸ்கார்பியோ N விலையை அதிரடியாக மாற்றிய மஹிந்திரா!
    X

    ஸ்கார்பியோ N விலையை அதிரடியாக மாற்றிய மஹிந்திரா!

    • மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ N மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் அறிமுக சலுகையாக குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்திய சந்தையில் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான மஹிந்திரா தனது ஸ்கார்பியோ N காரின் விலையை அதிரடியாக உயர்த்தி இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கார்பியோ N மாடலின் விலை அறிமுக சலுகையாக ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், அறிமுக சலுகை நிறைவு பெற்றதை அடுத்து ஸ்கார்பியோ N விலை ரூ. 1 லட்சம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. தற்போதைய விலை உயர்வு காரின் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும். விலை உயர்வின் படி மஹிந்திரா ஸ்கார்பியோ N பேஸ் பெட்ரோல் மாடல் விலை ரூ. 12 லட்சத்து 74 ஆயிரம் என மாறி இருக்கிறது.

    மஹிந்திரா ஸ்கார்பியோ N டீசல் வேரியண்ட்களின் விலை ரூ. 13 லட்சத்து 24 ஆயிரம் என துவங்குகிறது. அறிமுக விலைகளுடன் ஒப்பிடும் போது Z2 மற்றும் Z4 வேரியண்ட்களின் விலை ரூ. 75 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதோடு ஐந்து கூடுதல் வேரியண்ட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

    இதுதவிர Z6 டீசல் வேரியண்ட்களின் விலை ரூ. 65 ஆயிரமும், Z8 மற்றும் Z8L பெட்ரோல் வேரியண்ட்களின் விலை ரூ. 65 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஸ்கார்பியோ N Z8L மேனுவல் மற்றும் 4WD பெட்ரோல் வேரியண்ட் விலை ரூ. 65 ஆயிரம் அதிகரித்துள்ளது. Z8L மேனுவல் மற்றும் 4WD மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 01 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. Z8L ஆட்டோமேடிக் வேரியண்ட்களின் விலை ரூ. 15 ஆயிரம் உயர்ந்துள்ளது.

    இந்திய சந்தையில் மஹிந்திரா ஸ்கார்பியோ N 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 198 ஹெச்பி பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 173 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4WD ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

    அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ N வினியோகத்தில் டாப் எண்ட் மாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதன் மிட் ரேன்ஜ் மாடல்களின் வினியோகம் சமீபத்தில் துவங்கியது. டாப் எண்ட் Z8L வேரியண்ட் தவிர மற்ற வேரியண்ட்களின் காத்திருப்பு காலம் தற்போது 25 மாதங்கள் வரை உள்ளது. இது ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வேறுபடும்.

    Next Story
    ×