search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    ஆகஸ்டில் அறிமுகமாகும் புது கார் மாடல்கள் பட்டியல்..!
    X

    ஆகஸ்டில் அறிமுகமாகும் புது கார் மாடல்கள் பட்டியல்..!

    • வால்வோ மற்றும் ஆடி நிறுவனங்களும் இரண்டு புதிய கார்களை அறிமுகம் செய்ய உள்ளன.
    • மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை GLC மாடலை அறிமுகம் செய்கிறது.

    ஆட்டோமொபைல் சந்தையில் பல்வேறு புதிய கார் மாடல்கள் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதில் பெரும்பாலான மாடல்கள் ஆடம்பர பிரிவில் நிலைநிறுத்தப்பட இருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் CNG மாடல், டொயோட்டா ருமியன், மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட மாடல்கள் வரும் மாதத்தில் அறிமுகமாகின்றன.

    ஆடம்பர பிரிவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது அதிகம் விற்பனையாகும் எஸ்யுவி மாடலின் இரண்டாம் தலைமுறை மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதே போன்று வால்வோ மற்றும் ஆடி நிறுவனங்களும் இரண்டு புதிய கார்களை அறிமுகம் செய்ய உள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கும் புதிய கார் மாடல் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

    டாடா பன்ச் CNG:

    ஆகஸ்ட் மாதத்தின் துவக்கத்திலேயே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பன்ச் CNG மாடலை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த மாடல் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது. மேலும் புதிய பன்ச் CNG மாடலில் டுவின் சிலின்டர் செட்டப் வழங்கப்பட இருக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் GLC:

    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை GLC மாடலை ஆகஸ்ட் 9-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த கார் GLC 300 பெட்ரோல் மற்றும் GLC 220d டீசல் என இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கிறது.

    ஆடி Q8 இ டிரான்:

    ஆகஸ்ட் 18-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஆடி Q8 இ டிரான் மாடல் பேஸ்லிப்ட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த மாடல் எஸ்யுவி மற்றும் கூப் என இருவித பாடி ஸ்டைல்களில் கிடைக்கும். முந்தைய மாடல் போன்றே, ஆடி Q8 இ டிரான் 50 மற்றும் 55 என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இவற்றில் முறையே 95 கிலோவாட் ஹவர் மற்றும் 114 கிலோவாட் ஹவர் பேட்டரிகள் வழங்கப்படுகின்றன.

    டொயோட்டா ருமியன்:

    டொயோட்டா நிறுவனம் இரண்டு மாருதி சுசுகி கார்களின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் ஒன்று மாருதி சுசுகி எர்டிகா காரின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட ருமியன் எம்பிவி மாடல் ஆகும். டொயோட்டா நிறுவனம் ரூ. 10 லட்சம் பட்ஜெட்டில் எம்பிவி மாடலை விற்பனை செய்யாத நிலையில், இது அந்நிறுவனத்திற்கு சாதமாக இருக்கும் என்று தெரிகிறது.

    வால்வோ C40 ரிசார்ஜ்:

    வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த கார் வால்வோ C40 ரிசார்ஜ் எனும் பெயரில் அறிமுகமாகும் என்றும் இதன் வினியோகம் செப்டம்பர் மாத வாக்கில் துவங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Next Story
    ×