search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கிய ஷாருக் கான்
    X

    விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கிய ஷாருக் கான்

    • ரோல்ஸ் ராய்ஸ் பிளாக் பேட்ஜ் சீரிசில் கோஸ்ட், ரைத் மற்றும் டான் மற்றும் கலினன் பிளாக் பேட்ஜ் போன்ற மாடல்கள் உள்ளன.
    • இந்தியாவில் இந்த காரை வாங்கியுள்ள மூன்றாவது நபராக ஷாருக் கான் இருக்கிறார்.

    இந்தியாவின் பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக் கான் சமீபத்தில் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இவர் வாங்கி இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் காரின் விலை ரூ. 8.2 கோடி, எக்ஸ்-ஷோரூம் ஆகும். இவர் வாங்கியுள்ள ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் மாடல் ஆர்க்டிக் வைட் நிறம் கொண்டிருக்கிறது.

    இத்துடன் காரின் இண்டீரியர் முழுக்க ஆல்-வைட் லெதர் மற்றும் கோபால்டோ புளூ அக்செண்ட்களை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த காரை வாங்கியுள்ள மூன்றாவது நபராக ஷாருக் கான் இருக்கிறார். முன்னதாக ஐதராபாத்தை சேர்ந்த நசீர் கான் என்பவருக்கும், இரண்டாவதாக புவனேஷ்வரை சேர்ந்த நபருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் மாடல் டெலிவரி செய்யப்பட்டது.

    ரோல்ஸ் ராய்ஸ் பிளாக் பேட்ஜ் சீரிசில் கோஸ்ட், ரைத் மற்றும் டான் மற்றும் கலினன் பிளாக் பேட்ஜ் போன்ற மாடல்கள் உள்ளன. ஸ்டாண்டர்டு கலினன் மாடலில் இருப்பதை விட பிளாக் பேட்ஜ் மாடலின் ஸ்பிரிட் ஆஃப் எக்டசி சின்னம் மற்றும் இரட்டை R பேட்ஜ் உள்ளிட்டவைகளில் டார்க் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.

    இதேபோன்று முன்புற கிரில் சரவுண்ட், பக்கவாட்டு ஃபிரேம் ஃபினிஷர்கள், பூட் ஹேண்டில், பூட் ட்ரிம், லோயர் ஏர் இண்டேக் ஃபினிஷர் மற்றும் எக்சாஸ்ட் பைப் உள்ளிட்டவைகளில் டார்கென்டு க்ரோம்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த எஸ்யுவி-இல் 22 இன்ச் ஃபோர்ஜ் செய்யப்பட்ட அலாய் வீல்கள், காண்டிராஸ்ட் ரெட் நிற பிரேக் கேலிப்பர்கள் உள்ளன.

    கலினன் பிளாக் பேட்ஜ் மாடலிலும் 6.75 லிட்டர், டுவின் டர்போ வி12 எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 600 ஹெச்பி பவர், 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இதில் வழக்கமான கலினன் மாடலை விட 29 ஹெச்பி மற்றும் 50 நியூட்டன் மீட்டர் டார்க் அதிகம் ஆகும். இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×