search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    டாடா எலெக்ட்ரிக் கார்களின் அசத்தல் டீசர் வெளியீடு
    X

    டாடா எலெக்ட்ரிக் கார்களின் அசத்தல் டீசர் வெளியீடு

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த இருக்கிறது.
    • டாடா டியாகோ EV ஸ்பெஷல் எடிஷன் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மூன்று புது எலெக்ட்ரிக் வாகனங்களை ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிப்படுத்த இருக்கிறது. டீசர்களில் புது மாடல்களின் விவரங்கள் அதிக தெளிவாக தெரியவில்லை. எனினும், இவை டாடா டியாகோ ஹேச்பேக், ஹேரியர் மற்றும் சஃபாரி எஸ்யுவி மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது.

    இவற்றுடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கர்வ் மற்றும் அவின்யா எலெக்ட்ரிக் கான்செப்ட்களையும் காட்சிப்படுத்தலாம். எலெக்ட்ரிக் வடிவில் அறிமுகமாகும் பட்சத்தில் ஹேரியர் மற்றும் சஃபாரி மாடல்கள் வாடிக்கையாளர்களுக்கு வியப்பாக இருக்கும். ஏற்கனவே சில எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் நிலையில், ஹேரியர் மற்றும் சஃபாரி EV மாடல்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பெரிய எலெக்ட்ரிக் கார்களாக இருக்கும்.

    சமீபத்தில் முழுமையாக அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், டாடா டியாகோ EV மாடலுக்கான டீசரும் வெளியாகி இருக்கிறது. இந்த காருக்கான வினியோகம் இந்த மாதமே துவங்க இருக்கிறது. அந்த வகையில், தற்போதைய டீசர்களை தொடர்ந்து டாடா டியாகோ EV மாடலின் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இது NRG EV எடிஷன் அல்லது டார்க் எடிஷனாக இருக்கும் என தெரிகிறது.

    ஏற்கனவே வெளியான தகவல்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பன்ச் மாடலின் CNG வெர்ஷனை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது. மேலும் இந்த காரின் ஸ்பை படங்களும் இணையத்தில் வெளியாகி இருந்தது. அந்த வரிசையில், டாடா பன்ச் CNG மாடலின் விலை ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அறிவிக்கப்படலாம். இந்த ஆப்ஷன் டாப் எண்ட் வேரியண்டில் மட்டுமே வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    Next Story
    ×