search icon
என் மலர்tooltip icon

    பைக்

    இந்தியாவில் அறிமுகமான புதிய பிஎம்டபிள்யூ S1000RR - விலை எவ்வளவு தெரியுமா?
    X

    இந்தியாவில் அறிமுகமான புதிய பிஎம்டபிள்யூ S1000RR - விலை எவ்வளவு தெரியுமா?

    • பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மோட்டார்சைக்கிளை ரூ. 20 லட்சம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்துள்ளது.
    • புதிய பிஎம்டபிள்யூ பைக் டுகாட்டி பனிகேல் வி4, கவாசகி நின்ஜா ZX-10R மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் S1000RR மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய பிஎம்டபிள்யூ S1000RR விலை ரூ. 20 லட்சத்து 25 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    விலை விவரங்கள்:

    பிஎம்டபிள்யூ S1000RR ஸ்டாண்டர்டு ரூ. 20 லட்சத்து 25 ஆயிரம்

    பிஎம்டபிள்யூ S1000RR ப்ரோ ரூ. 22 லட்சத்து 15 ஆயிரம்

    பிஎம்டபிள்யூ S1000RR M ஸ்போர்ட் ரூ. 24 லட்சத்து 55 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    2023 பிஎம்டபிள்யூ S1000RR மோட்டார்சைக்கிள் ஏராளமான ஸ்டைலிங் மற்றும் மெக்கானிக்கல் அப்டேட்களை பெற்று இருக்கிறது. இதன் ஃபேரிங்கில் ஸ்போர்ட்ஸ் ஏரோ விங்லெட்கள் ஸ்டாண்டர்டு ஃபிட்மெண்ட் வடிவில் வழங்கப்படுகிறது. இது டவுன்ஃபோர்ஸ்-ஐ 10 கிலோ வரை குறைக்கும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் விண்ட்ஸ்கிரீன் உயரம் சற்றே அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் மெல்லிய எல்இடி ஹெட்லைட் முந்தைய மாடலில் வழங்கப்பட்டதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய ரியர் எண்ட், அதிக திறன் கொண்ட என்ஜின், மேம்பட்ட அசிஸ்டண்ஸ் சிஸ்டம்கள் உள்ளது. புதிய பிஎம்டபிள்யூ S1000RR மாடலிலும் 999சிசி, இன்லைன் நான்கு சிலிண்டர்கள் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் மற்றும் பிஎம்டபிள்யூ ஷிஃப்ட்கேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் 206.5 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ஸ்லைடு கண்ட்ரோல் ஃபன்ஷன், ஏபிஎஸ், பிரேக் ஸ்லைடு அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல், பை-டைரெக்‌ஷனல் குயிக்‌ஷிப்டர், லான்ச் கண்ட்ரோல், லேண் லிமிட்டர் மற்றும் ரெயின், ரோடு, டைனமிக், ரேஸ் என நான்கு ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்திய சந்தையில் 2023 பிஎம்டபிள்யூ S1000RR மோட்டார்சைக்கிள் டுகாட்டி பனிகேல் வி4, கவாசகி ZX-10R போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய பிஎம்டபிள்யூ S1000RR மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகின்றன.

    Next Story
    ×