search icon
என் மலர்tooltip icon

    பைக்

    ரூ. 69.99 லட்சம் விலையில் புதிய டுகாட்டி பைக் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
    X

    ரூ. 69.99 லட்சம் விலையில் புதிய டுகாட்டி பைக் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

    • டுகாட்டி நிறுவனத்தின் புதிய சூப்பர் பைக் மாடல் கணிசமான அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன.
    • புதிய டுகாட்டி மாடலில் நான்கு விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது 2023 பனிகேல் V4 R சூப்பர் பைக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2023 டுகாட்டி பனிகேல் V4 R விலை ரூ. 69 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த மாடலில் 998சிசி, நான்கு சிலின்டர்கள் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 215 ஹெச்பி பவர், 111.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    இத்துடன் அக்ரபோவிக், ஃபுல் சோர்ஸ் எக்சாஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்த பைக்கின் எடை 5 கிலோ வரை குறைந்துள்ளது. மேலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் பை-டைரெக்ஷனல் குயிக்ஷஃப்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சஸ்பென்ஷனிற்கு முன்புறம் 43mm ஆலின்ஸ் NPX 25/30 ஃபோர்க்குகள், பின்புறம் ஆலின்ஸ் TTX 36 மோனோ ஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு டுவின் 330mm முன்புற டிஸ்க், பிரெம்போ ஸ்டைல்மா M4.30 கேலிப்பர்கள், பின்புறம் 245mm சிங்கில் ரோட்டார், 2 பிஸ்டன் கேலிப்பர்கள் உள்ளன.

    இந்த மாடலில் உள்ள காம்ப்ரிஹென்சிவ் எலெக்டிரானிக்ஸ் பேக்கேஜ் நான்கு ரைடிங் மோட்கள், கார்னெரிங் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல், லான்ச் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், ஸ்லைடு கண்ட்ரோல், என்ஜின் பிரேக் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோ டயர் கலிபரேஷன் போன்ற வசதிகளை வழங்குகிறது.

    இத்துடன் மெஷின்டு மிரர் பிளாக் ஆஃப் பிளேட்கள், டுகாட்டி டேட்டா அனலைசர் மற்றும் ஜிபிஎஸ் மாட்யுல் வழங்கப்படுகிறது. இதுதவிர புதிய மாடலிலும் டுவிட் பாட் ஹெட்லைட், ஃபுல் ஃபேரிங், ஏரோடைனமிக் விங்லெட்கள், ரைடர் இருக்கை, சிங்கில் சைடு ஸ்விங்ஆர்ம் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×