search icon
என் மலர்tooltip icon

    பைக்

    இணையத்தில் லீக் ஆன புது விவரங்கள் - அசத்தலாக உருவான பல்சர் NS400
    X

    இணையத்தில் லீக் ஆன புது விவரங்கள் - அசத்தலாக உருவான பல்சர் NS400

    • புதிய NS200 மாடலில் உள்ளதை போன்றே இருக்கும் என்று தெரிகிறது.
    • டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் போன்ற வசதிகள் வழங்கப்படலாம்.

    பஜாஜ் நிறுவனம் இதுவரை அறிமுகம் செய்ததில் சக்திவாய்ந்த பல்சர் மோட்டார்சைக்கிளை இன்னும் சில நாட்களில் அறிமுகம் செய்ய உள்ளது. பஜாஜ் பல்சர் NS400 பெயரில் அறிமுகமாகும் இந்த பைக் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் கொண்டிருக்கும் என்றும் இது முற்றிலும் புதிய NS200 மாடலில் உள்ளதை போன்றே இருக்கும் என்று தெரிகிறது.

    இந்த யூனிட் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். அலர்ட், நேவிகேஷன் போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் பல்வேறு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. இந்த மாடலில் ஏ.பி.எஸ். மோட்கள், டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் போன்ற வசதிகள் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கலாம்.

    புதிய பஜாஜ் பல்சர் NS400 மாடலில் டாமினர் 400 மாடலில் உள்ளதை போன்ற 373சிசி என்ஜின் வழங்கப்படலாம். இது 39.42 ஹெச்.பி. பவர், 35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    இத்துடன் புதிய பல்சர் NS400 மாடலில் முன்புறம் யு.எஸ்.டி. ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட், பிரேக்கிங்கிற்கு டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன. டிசைனை பொருத்தவரை இந்த மாடலில் ஸ்ப்லிட் சீட், டெயில் பகுதியில் கிராப் ரெயில் வழங்கப்படுகிறது. இதன் ஒட்டுமொத்த தோற்றம் NS200 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

    அறிமுகம் செய்யப்பட்டதும், இந்திய சந்தையில் பஜாஜ் பல்சர் NS400 மோட்டார்சைக்கிள் கே.டி.எம். 390 டியூக், பி.எம்.டபிள்யூ. G 310 R மற்றும் டி.வி.எஸ். அபாச்சி RTR 310 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    Next Story
    ×