என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
பைக்
![அதிக மைலேஜ் கொடுக்கும் 150சிசி பைக்.. பக்கா பிளான் போடும் பஜாஜ் அதிக மைலேஜ் கொடுக்கும் 150சிசி பைக்.. பக்கா பிளான் போடும் பஜாஜ்](https://media.maalaimalar.com/h-upload/2023/11/15/1981823-bajaj-platina.webp)
கோப்புப் படம்
அதிக மைலேஜ் கொடுக்கும் 150சிசி பைக்.. பக்கா பிளான் போடும் பஜாஜ்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பஜாஜ் நிறுவனம் பல்சர் P150 மாடலின் விற்பனையை நிறுத்தியது.
- பஜாஜ் கம்யுட்டர் பைக் CT 150X பெயரில் விற்பனைக்கு வரலாம்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய கம்யுட்டர் ரக மோட்டார்சைக்கிள் டெஸ்டிங் செய்யப்படுகிறது. இது பஜாஜ் நிறுவனத்தின் CT சீரிசில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. டெஸ்டிங் செய்யப்படும் யூனிட் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இது CT பிராண்டிங்கில் வெளியாவதை உணர்த்தும் அம்சங்கள் ஆங்காங்கே காணப்படுகிறது.
டெஸ்டிங் செய்யப்படும் மாடலில் அளவில் பெரிய வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், உயரமான மற்றும் அகலமான ஹேண்டில்பார் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் ஹேண்ட் கார்டு, சம்ப் கார்டு மற்றும் பிரேஸ்டு ஹேண்டில் பார் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
Photo Courtesy: bikewale
புதிய மாடல் CT 125X மாடலின் மேல் நிலைநிறுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில், இந்த மாடலில் 150சிசி திறன் கொண்ட என்ஜின் வழங்கப்படும் என்று தெரிகிறது. புதிய பஜாஜ் கம்யுட்டர் பைக் CT 150X பெயரில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் தான் பஜாஜ் நிறுவனம் பல்சர் P150 மாடலின் விற்பனையை நிறுத்தியது.