search icon
என் மலர்tooltip icon

    பைக்

    டுகாட்டி டெசர்ட் எக்ஸ் இந்திய வினியோகம் துவக்கம்
    X

    டுகாட்டி டெசர்ட் எக்ஸ் இந்திய வினியோகம் துவக்கம்

    • டுகாட்டி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டெசர்ட் எக்ஸ் மோட்டார்சைக்கிள் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது.
    • இந்தியாவில் டுகாட்டி டெசர்ட் எக்ஸ் மாடல் டிரையம்ப் டைகர் 900 ரேலி, ஹோண்டா அப்ரிக்கா ட்வின் மற்றும் பிஎம்டபிள்யூ F850 GS மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது டெசர்ட் எக்ஸ் அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் வினியோகத்தை துவங்கி விட்டது. ஆஃப் ரோட் சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கும் புது டூரிங் மோட்டார்சைக்கிள் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் புதிய டுகாட்டி டெசர்ட் எக்ஸ் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 91 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய டுகாட்டி டெசர்ட் எக்ஸ் மாடலில் 937சிசி, L-ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் புதிய டுகாட்டி மான்ஸ்டர் மற்றும் மல்டிஸ்டிராடா வி2 மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 110 ஹெச்பி பவர், 92 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய டெசர்ட் எக்ஸ் மாடலில் ஃபுல் எல்இடி லைட்டிங், புளூடூத் வசதி கொண்ட ஐந்து இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இந்த மாடலில்- ஸ்போர்ட், டூரிங், அர்பன், வெட், ரேலி மற்றும் எண்டியுரோ என ஆறு வித ரைடிங் மோட்கள் உள்ளது.

    இத்துடன் ஃபுல், ஹை, மீடியம் மற்றும் லோ என நான்கு பவர் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றுடன் குரூயிஸ் கண்ட்ரோல், போஷ் IMU, என்ஜின் பிரேக் கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், பை-டைரெஷனல் குயிக்ஷிஃப்டர் மற்றும் கார்னெரிங் ஏபிஎஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய டெசர்ட் எக்ஸ் மாடலில் கூடுதலாக ஆப்ஷனல் அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. இந்திய சந்தையில் டுகாட்டி டெசர்ட் எக்ஸ் மாடல் டிரையம்ப் டைகர் 900 ரேலி, ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் மற்றும் பிஎம்டபிள்யூ F850 GS போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    Next Story
    ×