என் மலர்
பைக்

X
கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் திவாலானது
By
மாலை மலர்2 March 2025 4:14 PM IST

- ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் 301 கோடி கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திவாலானது.
- ஹீரோ எலெக்ட்ரிக் கடந்த நிதியாண்டில் 11,500 மின்சார பைக்குகளை மட்டுமே விற்பனை செய்தது.
இந்தியாவின் முதல் இ- ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ எலெக்ட்ரிக், ரூ.301 கோடி கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திவாலானது.
கடந்த டிசம்பர் மாதம் திவால் நடவடிக்கை தொடங்கிய நிலையில், அந்நிறுவனத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் ஏலத் தொகையை பதிவு செய்வதற்கான கால அவகாசம் மார்ச் 14ம் தேதி நிறைவடைகிறது.
பாங்க் ஆஃப் பரோடா, கோடக் மஹிந்திரா வங்கி, சவுத் இந்தியன் வங்கி மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி உள்ளிட்ட வங்கிகளிடம் மட்டும் ஹீரோ எலெக்ட்ரிக் ரூ.82 கோடி கடன் வாங்கியுள்ளது.
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் 2023 நிதியாண்டில் 1,00,000 மின்சார இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் கடந்த நிதியாண்டில் வெறும் 11,500 மின்சார இரு சக்கர வாகனங்களை மட்டுமே விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X