என் மலர்
பைக்

விரைவில் இந்தியா வரும் ஹோண்டா 500சிசி பைக்
- ஹோண்டா நிறுவனம் முற்றிலும் புதிய CB500F மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
- வெளியீட்டுக்கு முன் ஹோண்டா CB500F மோட்டார்சைக்கிள் பெங்களூரு பிங்விங் மையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஹோண்டா இந்தியா நிறுவனம் புதிய CB500F மோட்டார்சைக்கிளை பெங்களூருவில் உள்ள பிங்விங் விற்பனை மையத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறது. மோட்டார்சைக்கிள் அறிமுகமாகும் முன் அதனை விற்பனையகத்தில் காட்சிப்படுத்துவது ஹோண்டா நிறுவனத்திற்கு முதல் முறை ஆகும்.
புதிய மோட்டார்சைக்கிளை பார்க்க வருமாறு விற்பனையகம் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் புதிய மோட்டார்சைக்கிளுக்கு இந்திய சந்தையில் அதிக வரவேற்பு கிடைக்கும் என தெரிகிறது. இதைத் தொடர்ந்து வெளியீடு நடைபெற இருக்கிறது.
ஹோண்டா CB500F மாடலில் 471சிசி, பேரலல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 47 ஹெச்பி பவர், 43 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர ஸ்லிப்ட் மற்றும் அசிஸ்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
ஹார்டுவேரை பொருத்தவரை ஹோண்டா CB500F மாடலில் முன்புறம் 41 மில்லிமீட்டர் ஷோவா செபரேட் பன்ஷன் போர்க் பிக் பிஸ்டன், பின்புறம் மோனோ ஷாக் யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிங்கிற்கு முன்புறம் ட்வின் டிஸ்க் பிரேக்குகளும், பின்புறம் ஒற்றை டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது.
Photo Courtesy: TeamBHP






