search icon
என் மலர்tooltip icon

    பைக்

    ஜூலையில் புதிய S1 ஸ்கூட்டர் - ஒலா எலெக்ட்ரிக் அசத்தல்!
    X

    ஜூலையில் புதிய S1 ஸ்கூட்டர் - ஒலா எலெக்ட்ரிக் அசத்தல்!

    • ஒலா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான டீசரை வெளியிட்டு உள்ளது.
    • புதிய ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வினியோகம் அடுத்த மாதம் துவங்குகிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் விரைவில் புதிய ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தனது டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் S1 சீரிசில் புதிய வாகனமாக இருக்கும் என்று தெரிகிறது.

    புதிய ஒலா S1 ஸ்கூட்டருக்கான டீசரும் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் புதிய ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும், தற்போதைய மாடல்களில் உள்ளதை போன்றே, பாட்-வடிவ எல்இடி ஹெட்லைட்களை கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    பெங்களூரை சேர்ந்த ஒலா எலெக்ட்ரிக் நிறுவன உற்பத்தியாளரான ஒலா எலெக்ட்ரிக் ஜூலை மாதம் நடைபெற இருக்கும் #endICEAge நிகழ்வின் முதல் பாகத்தில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியிடப்பட இருக்கிறது. டீசர்களில் மூன்று ஹெட்லைட்கள் இருளில் பிரகாசமாக எரிவது போன்று காட்சியளிக்கிறது. மேலும் இதன் முன்புறம் சிறிய வின்ட்ஸ்கிரீன் காணப்படுகிறது.

    சமீபத்தில் தான் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 சீரிஸ் மாடல்களை மாற்றியமைத்தது. அதில் ஒலா S1 ஏர் மாடலின் 2 கிலோவாட் ஹவர் மற்றும் 4 கிலோவாட் ஹவர் வெர்ஷன்கள் நிறுத்தப்பட்டது. அந்த வகையில், தற்போது ஒலா S1 ஏர் மாடல் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. இந்த மாடல் முழு சார்ஜ் செய்தால் 125 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    Next Story
    ×