search icon
என் மலர்tooltip icon

    பைக்

    100 கிமீ ரேன்ஜ் கொண்ட பியாஜியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்
    X

    100 கிமீ ரேன்ஜ் கொண்ட பியாஜியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்

    • பியாஜியோ 1 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காட்சிக்கு வைக்கப்பட்டது.
    • இந்த ஸ்கூட்டர் நார்மல் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது.

    இத்தாலியை சேர்ந்த ஸ்கூட்டர் உற்பத்தியாளர் பியாஜியோ-வின் வெஸ்பா ஸ்கூட்டர் அதிக பிரபலமான மாடல் ஆகும். பியாஜியோ நிறுவனத்தின் பியாஜியோ 1 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது பயனர்கள் அன்றாட பயன்பாடுக்கு, சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆப்ஷனாக அமைகிறது.

    பியாஜியோ 1 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இத்தாலியின் மிலனில் நடைபெற்ற 2022 EICMA நிகழ்வில் பியாஜியோ 1 மாடலுடன் காட்சிக்கு வைக்கப்பட்டது. பியாஜியோ 1 பிளஸ் மாடலில் கழற்றக்கூடிய 2.3 கிலோவாட்ஹவர் லித்தியம் அயன் பேட்டரி பேக் உள்ளது. இது நீண்ட கால பயன்பாட்டிற்கு ஏற்றதாகும்.

    பியாஜியோ 1 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் 1700 வாட் பி.எல்.டி.சி. எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்கூட்டர் நார்மல் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. இத்துடன் ரிமோட் அக்சஸ், எல்இடி லைட்கள், ஸ்டார்ட் பட்டன், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், டிஜிட்டல் ஒடோமீட்டர், யுஎஸ்பி போர்ட் பல்வேறு ரைடிங் மோட்கள் உள்ளன.

    இந்திய சந்தையில் புதிய பியாஜியோ 1 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 1.5 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவோருக்கு எளிய மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×