search icon
என் மலர்tooltip icon

    பைக்

    சுசுகி V-Strom 650XT முன்பதிவு நிறுத்தம் - பண்டிகை காலத்தில் புதிய பைக் அறிமுகம் செய்ய திட்டம்!
    X

    சுசுகி V-Strom 650XT

    சுசுகி V-Strom 650XT முன்பதிவு நிறுத்தம் - பண்டிகை காலத்தில் புதிய பைக் அறிமுகம் செய்ய திட்டம்!

    • சுசுகி V-Strom 800DE மாடலில் 776சிசி, பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இந்திய சந்தையில் இந்த பிரிவின் குறைந்த விலை மோட்டார்சைக்கிளாக இது இருக்கும்.

    சுசுகி நிறுவன இந்திய விற்பனையாளர்கள் V-Strom 650XT மாடலுக்கான முன்பதிவை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சுசுகி நிறுவனம் V-Strom 800DE மாடல் அறிமுகம் பற்றி விற்பனையாளர்களுக்கு தகவல் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. எனினும், புதிய சுசுகி V-Strom 800DE மாடலுக்கான முன்பதிவுகளும் துவங்கவில்லை.

    சுசுகி V-Strom 800DE மாடலில் 776சிசி, பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 83 ஹெச்பி பவர், 78 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய சுசுகி V-Strom 800DE மாடலில் பல்வேறு ரைடிங் மோட்கள் உள்ளன.

    சுசுகி V-Strom 800DE

    இத்துடன் டு-வே குயிக்ஷிப்டர், டிராக்ஷன் கண்ட்ரோல், 5 இன்ச் டிஎப்டி ஸ்கிரீன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த மோட்டார்சைக்கிளில் 21/17-இன்ச் ஸ்போக் வீல், டன்லப் டிரெயில்மேக்ஸ் மிக்ஸ்டூர் ரக டயர்கள் வழங்கப்பட்டு உள்ளன. சஸ்பென்ஷனுக்கு ஷோவா முழுமையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் பிரீ-லோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோ ஷாக் யூனிட் வழங்கப்படுகிறது.

    இந்த மோட்டார்சைக்கிள் கிரவுண்ட் கிளியரன்ஸ் 855 மில்லிமீட்டர்கள் ஆகும். இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் இது இந்த பிரிவில் குறைந்த விலை மோட்டார்சைக்கிளாக இருக்கும் என்று தெரிகிறது. இந்திய சந்தையில் சுசுகி V-Strom 800DE மாடல் பிஎம்டபிள்யூ F850GS, டிரையம்ப் டைகர் 900 ரேலி போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    Next Story
    ×