search icon
என் மலர்tooltip icon

    பைக்

    கனெக்டெட் டெக் கொண்ட புதிய ஜூப்பிட்டர் அறிமுகம்.. டிவிஎஸ் அசத்தல்..!
    X

    கனெக்டெட் டெக் கொண்ட புதிய ஜூப்பிட்டர் அறிமுகம்.. டிவிஎஸ் அசத்தல்..!

    • புதிய ஜூப்பிட்டர் ZX டிரம் வேரியன்டில் டிவிஎஸ் டிரேட்மார்க் செய்திருக்கும் ஸ்மார்ட் எக்சோ-னெக்ட் தொழில்நுட்பம் உள்ளது.
    • டிவிஎஸ் ஜூப்பிட்டர் ZX வேரியன்டிலும் 109.7சிசி, ஏர் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ஜூப்பிட்டர் ZX டிரம் வேரியன்டில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கி இருக்கிறது. இந்த வெர்ஷனின் விலை ரூ. 84 ஆயிரத்து 468, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ப்ளூடூத் கனெக்டிவிட்டி இல்லாத வேரியன்டை விட ரூ. 2 ஆயிரத்து 300 வரை விலை அதிகம் ஆகும்.

    ப்ளூடூத் வசதி கொண்ட இரண்டாவது ஜூப்பிட்டர் வேரியன்ட் இது ஆகும். ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் ஜூப்பிட்டர் ZX ஸ்மார்ட் எக்சோ-னெக்ட் வேரியன்ட் விலை இதைவிட அதிகம் ஆகும். இந்த வேரியன்டிற்கு அதிக வரவேற்பு கிடைத்த காரணத்தால், தற்போது இந்த வேரியன்டிலும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய அப்டேட் காரணமாக ஜூப்பிட்டர் ZX டிரம் வேரியன்டில் டிவிஎஸ் டிரேட்மார்க் செய்திருக்கும் ஸ்மார்ட் எக்சோ-னெக்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், வாய்ஸ் அசிஸ்ட், எஸ்எம்எஸ் மற்றும் கால் அலெர்ட்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் பில்ட்-இன் யுஎஸ்பி மொபைல் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    மற்ற வேரியன்ட்களை போன்றே டிவிஎஸ் ஜூப்பிட்டர் ZX வேரியன்டிலும் 109.7சிசி, ஏர் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 7.77 ஹெச்பி பவர், 8.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    புதிய டிவிஎஸ் ஜூப்பிட்டர் வேரியன்ட் விலை ரூ. 73 ஆயிரத்து 240 என்றும் கிளாசிக் வேரியன்ட் விலை ரூ. 89 ஆயிரத்து 648 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் டிவிஎஸ் ஜூப்பிட்டர் மாடல் ஹோண்டா ஆக்டிவா 6ஜி மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

    Next Story
    ×