என் மலர்
பைக்
டிவிஎஸ் ரைடர் 125 புது வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம்
- டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் 125 சிசி மோட்டார்சைக்கிள் புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
- புது வேரியண்ட் முந்தைய வெர்ஷனில் வழங்கப்பட்டு இருந்த அம்சங்களுடன் கூடுதலாக ஸ்மார்ட் அம்சங்களை கொண்டிருக்கிறது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவவனம் இந்திய சந்தையில் புதிய ரைடர் 125 SmartXonnect மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய வெர்ஷன் அறிமுகமாகி இருப்பதை தொடர்ந்து ரைடர் 125 மோட்டார்சைக்கிள்: டிரம், டிஸ்க் மற்றும் SmartXonnect என மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.
டிசைன் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை புதிய ரைடர் 125 SmartXonnect ஒரே மாதிரியே உள்ளது. புது SmartXonnect வேரியண்டிலும் எல்இடி ஹெட்லைட், இளமை மிக்க ஸ்டைலிங், காம்பேக்ட் அளவீடுகளை கொண்டிருக்கிறது. எனினும், SmartXonnect வேரியண்டில் புதிதாக டிஎப்டி கன்சோல் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அழைப்புகள், எஸ்எம்எஸ், நோட்டிபிகேஷன் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியை பெறலாம்.
இத்துடன் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு அருகாமையில் உள்ள எரிபொருள் நிரப்பும் மையத்திற்கு டிஎப்டி ஸ்கிரீன் மூலம் வழி பார்த்து எளிதில் சென்றடைய முடியும். டிவிஎஸ் ரைடர் SmartXonnect வேரியண்டிலும் 124.8சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜினே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 11.2 ஹெச்பி பவர், 11.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ், முன்புறம் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட், முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய டிவிஎஸ் ரைடர் SmartXonnect விலை ரூ. 99 ஆயிரத்து 990, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது டிவிஎஸ் ரைடர் டிரம் வேரியண்டை விட ரூ. 14 ஆயிரமும், டிஸ்க் பிரேக் வேரியண்டை விட ரூ. 6 ஆயிரம் அதிகமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் டிவிஎஸ் ரைடர் 125சிசி மோட்டார்சைக்கிள் ஹோண்டா SP125, ஹீரோ கிளாமர் 125 மற்றும் பஜாஜ் பல்சர் 125 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.