என் மலர்
பைக்
யுலு மற்றும் பஜாஜ் ஆட்டோ கூட்டணியில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் அறிமுகம்
- இரு நிறுவனங்கள் கூட்டணியில் தனிநபர் பயன்பாடு மற்றும் டெலிவரிக்காக தனித்தனி மாடல்கள் அறிமுகம்.
- இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களையும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உற்பத்தி செய்ய இருக்கிறது.
யுலு மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனங்கள் இணைந்து மிராகில் GR மற்றும் DeX GR மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இரு மாடல்களும் யுலு நிறுவனத்தின் ஏஐ சார்ந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இவற்றை செட்டாக் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுகிறது.
மிராகில் GR தனிநபர் பயன்பாட்டு வாகனம் ஆகும். இதனை குறைந்த தூர போக்குவரத்துக்கு ஏற்ற வாகனமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் மணிக்கு அதிகபட்சம் 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. DeX GR மாடல் வினியோக பயன்பாட்டுக்கு ஏற்றதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் அதிகபட்சம் 15 கிலோ எடையை சுமந்து செல்ல முடியும்.
இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் ஹெட்லைட், டெயில்லைட், டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், ரியர் ஸ்ப்ரிங்குகள், இரு வீல்களிலும் டிரம் பிரேக்குகள் உள்ளன. கடந்த மூன்று மாதங்களில் இந்த எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் நாடு முழுக்க முக்கிய நகரங்களில் சுமார் ஒரு லட்சம் வாகனங்களை இயக்க ஆயத்தமாகி இருக்கிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் யுலு நிறுவனம் வருவாயை பத்து மடங்கு வரை அதிகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. பஜாஜ் ஆட்டோ உடனான கூட்டணி மூலம் யுலு நிறுவனம் செலவீனங்களை குறைப்பது மற்றும் ஒட்டுமொத்த நிதி மேலான்மையை மேம்படுத்தி, உள்நாட்டு உதிரிபாகங்களை பயன்படுத்துகிறது.
யுலு ஃப்ளீட்டில் கழற்றி மாற்றக்கூடிய பேட்டரிகள் உள்ளன. இவை யுமா எனர்ஜி மூலம் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. தற்போது பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லி பகுதிகளில் சுமார் 100 யுமா ஸ்டேஷன்கள் உள்ளன. 2024 வாக்கில் இந்த எண்ணிக்கையை 500 ஆக அதிகப்படுத்த இந்நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.