search icon
என் மலர்tooltip icon

    கார்

    ரூ. 3.35 கோடியில் ஆடம்பர மெபேக் காரை அறிமுகம் செய்த மெர்சிடிஸ்
    X

    ரூ. 3.35 கோடியில் ஆடம்பர மெபேக் காரை அறிமுகம் செய்த மெர்சிடிஸ்

    • புதிய மெபேக் கார் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.
    • இந்த காரில் லெவல் 2 ADAS சூட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரண்டு புதிய ஆடம்பர கார் மாடல்களை அறிமுகம் செய்தது. இவை மெபேக் GLS 600 மற்றும் S53 AMG E பெர்பார்மன்ஸ் ஆகும். 2024 மெர்சிடிஸ் மெபேக் GLS 600 மாடலின் விலை ரூ. 3 கோடியே 35 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய மெபேக் கார் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த காரின் முன்புறத்தில் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட சிக்னேச்சர் கிரில், சிறு மாற்றங்கள் செய்யப்பட்ட பம்ப்பர்கள், மேம்பட்ட எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், டெயில் லைட்கள், 22 இன்ச் மல்டி-ஸ்போக் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.


    உள்புறத்தில் பர்மெஸ்டர் சரவுண்ட் சவுண்ட் மியூசிக் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, அகௌஸ்டிக் கம்ஃபர்ட் பேக்கேஜ், புதிய ஸ்டீரிங் வீல் டிசைன், குளிர்சாதன பெட்டி, ஷேம்பெயின் வைத்துக் கொள்ளும் வசதி, லெவல் 2 ADAS சூட், ரியர் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன்கள், பார்கிங் அசிஸ்ட், அதிநவீன MBUX சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    2024 மெர்சிடிஸ் மெபேக் GLS 600 மாடலில் 4.0 லிட்டர், டுவின் டர்போ V8 பெட்ரோல் எஞ்சின் மற்றும் 48 வோல்ட் மைல்ட் ஹைப்ரிட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் பெட்ரோல் எஞ்சின் 557 ஹெச்.பி. பவர், 730 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்துகிறது.

    இதில் உள்ள ஹைப்ரிட் சிஸ்டம் 22 ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×