என் மலர்
கார்
அதிகளவு மாற்றங்களுடன் அறிமுகமான 2024 ரேன்ஜ் ரோவர் எவோக்
- 2024 ரேன்ஜ் ரோவர் எவோக் மாடல் மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.
- புதிய எவோக் மாடலில் பெட்ரோல் ஹைப்ரிட் மோட்டார் செட்டப் வழங்கப்பட்டு உள்ளது.
லேண்ட் ரோவர் நிறுவனம் முற்றிலும் புதிய 2024 ரேன்ஜ் ரோவர் எவோக் எஸ்யுவி மாடல் விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. 2024 எவோக் மாடல் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. முந்தைய வெர்ஷனுடன் ஒப்பிடும் போது புதிய மாடலில் அதிக தொழில்நுட்ப மற்றும் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
2024 ரேன்ஜ் ரோர் எவோக் மாடலில் சிரவக வடிவம் கொண்ட மெஷ் முன்புற கிரில், பிக்சல்-1 எல்இடி ஹெட்லேம்ப்கள், சிக்னேச்சர் எல்இடி டிஆர்எல்கள், புதிய பம்ப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ப்ரோஃபல் பகுதியில் கூப் போன்ற தோற்றம், கேரக்டர் லைன்கள், ஃபிலஷ் டோர் ஹேன்டில்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இத்துடன் முற்றிலும் புதிய அலாய் வீல்கள், அதிகபட்சம் 21 இன்ச் வரையிலான அளவுகளில் வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் புதிய ரேன்ஜ் ரோவர் எவோக் மாடலை அரோய்ஸ் கிரே, டிரைபெகா புளூ மற்றும் கொரிந்தியன் பிரான்ஸ் என மூன்று நிறங்களில் ஒன்றை தேர்வு செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
2024 எவோக் மாடலின் உள்புறம் 11.4 இன்ச் வளைந்த கிளாஸ் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, 3டி சரவுன்ட் கேமரா, அமேசான் அலெக்சா, பத்து வாய்ஸ் கமாண்ட்கள், பிவி ப்ரோ 2 யுஐ போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. மற்ற மாடல்களை போன்று இல்லாமல், புதிய மாடலில் சென்டர் கன்சோலில் உள்ள பட்டன்கள் முழுமையாக நீக்கப்பட்டு இருக்கிறது.
இந்த மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட கியர் லீவர் வழங்கப்பட்டு உள்ளது. புதிய ரேன்ஜ் ரோவர் எவோக் மாடலில் 1.5 லிட்டர் மூன்று சிலிண்டர்கள் கொண்ட மைல்டு-பெட்ரோல் ஹைப்ரிட் மோட்டார் வழங்கப்படுகிறது. இந்த யூனிட் 160 ஹெச்பி வரையிலான திறன் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
இதன் மைல்டு ஹைப்ரிட் மோட்டார் 14.9 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்டிருக்கிறது. இது 62 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இது டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் பேட்டரியை 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 30 நிமிடங்களையே எடுத்துக் கொள்கிறது.