search icon
என் மலர்tooltip icon

    கார்

    யூரோ என்கேப் கிராஷ் டெஸ்டில் அசத்திய பிஒய்டி அட்டோ 3
    X

    யூரோ என்கேப் கிராஷ் டெஸ்டில் அசத்திய பிஒய்டி அட்டோ 3

    • சீன எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான பிஒய்டி இந்திய சந்தையில் புதிய அட்டோ 3 காரை சமீபத்தில் அறிமுகம் செய்தது.
    • புதிய பிஒய்டி அட்டோ 3 முழு சார்ஜ் செய்தால் 521 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

    சீனாவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர் பிஒய்டி ஐந்து கதவுகள் கொண்ட அட்டோ 3 எலெக்ட்ரிக் எஸ்யுவி-யை இந்தியாவில் சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த கார் யூரோ என்கேப் கிராஷ் டெஸ்டில் ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெற்று இருக்கிறது. இந்த முடிவுகள் வலதுபுறம் மற்றும் இடதுபுற டிரைவ் கொண்ட இரு வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.

    குளோபல் என்கேப் போன்றே யூரோ என்கேப் அட்டோ 3 காரின் பேஸ் வேரியண்டை சோதனை செய்தது. இந்த காரில் ஏழு ஏர்பேக், சீட் பெல்ட் பிரிடென்ஷனர்கள், ஐசோபிக்ஸ் ஆன்க்கர், ADAS அம்சங்களான ஆட்டோனோமஸ் எமர்ஜன்சி பிரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட், ஸ்பீடு அசிஸ்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. அனைத்து அம்சங்களும் இந்திய மாடலிலும் உள்ளது.

    பெரியவர்கள் பயணிக்கும் பிரிவில் அட்டோ 3 மாடல் 91 சதவீத புள்ளிகளை பெற்று அசத்தி இருக்கிறது. இந்த கார் 38-இல் 34.7 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்த கார் ஓட்டுனர் மற்றும் பயணிகளுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கி இருக்கிறது. பக்கவாட்டு டெஸ்டிங்கிலும் அதிக புள்ளிகளை அட்டோ 3 பெற்றுள்ளது.

    குழந்தைகள் பயணிக்கும் போது எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் அனைத்து விட டெஸ்டிங்கிலும் அதிக புள்ளிகளை பெற்று இருக்கிறது. ஆறு வயது முதல் பத்து வயதுடைய குழந்தைகளுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும் என கிராஷ் டெஸ்டிங்கில் உறுதியாகி இருக்கிறது. இந்த கார் 49-க்கு 44 புள்ளிகளை பெற்றுள்ளது.

    Next Story
    ×