search icon
என் மலர்tooltip icon

    கார்

    தொடர் சோதனையில் சிட்ரோயன் எலெக்ட்ரிக் - விரைவில் வெளியீடு!
    X

    தொடர் சோதனையில் சிட்ரோயன் எலெக்ட்ரிக் - விரைவில் வெளியீடு!

    • சிட்ரோயன் நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே தனது புது எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.
    • புது எலெக்ட்ரிக் கார் அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த சிட்ரோயன் C3 ஹேச்பேக் மாடலை தழுவி உருவாக்கி இருக்கிறது.

    இந்திய சந்தையில் இந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் சிட்ரோயன் நிறுவனத்தின் பட்ஜெட் மாடலாக சிட்ரோயன் C3 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இதே காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் சிட்ரோயன் நிறுவனம் அறிவித்து இருந்தது. சில வாரங்களுக்கு முன் இந்திய சந்தையில் சிட்ரோயன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் டீசர் வெளியிடப்பட்டது.

    இதைத் தொடர்ந்து புதிய எலெக்ட்ரிக் கார் சிட்ரோயன் eC3 எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என்றும் சிட்ரோயன் அறிவித்தது. இதனிடையே புதிய சிட்ரோயன் eC3 மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக இந்த மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வரிசையில் சிட்ரோயன் eC3 மாடலின் புது ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது.

    தற்போதைய ஸ்பை படங்களில் உள்ள சிட்ரோயன் eC3 மாடல் ஆரஞ்சு நிறம் கொண்டிருக்கிறது. இந்த கார் சார்ஜிங் மையம் ஒன்றில் டாடா நெக்சான் மாடலின் அருகில் நிறுத்தப்பட்டு இருக்கிறது. நெக்சானுடன் சிட்ரோயன் eC3 மாடலும் சார்ஜ் ஏற்றிக் கொண்டிருக்கும் போது ஸ்பை படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. வெளிப்புறத்தில் புதிய சிட்ரோயன் eC3 மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப்கள், ஸ்டீல் வீல் மற்றும் கவர்கள், சதுரங்க வடிவம் கொண்ட டெயில் லேம்ப்கள், ரூஃப் ரெயில்கள், டூயல் டோன் பெயிண்ட் கொண்டிருக்கிறது.

    இவை புது எலெக்ட்ரிக் கார் தோற்றம் அதன் பெட்ரோல் மாடலுக்கு இணையாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. புதிய eC3 மாடலின் இண்டீரியர் எப்படி இருக்கும் என்ற விவரங்கள் மர்மமாகவே உள்ளது. எனினும், இந்த காரில் 10 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் ஓட்டுனர் இருக்கை மற்றும் பவர் விண்டோக்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    இந்த காரின் தொழில்நுட்ப விவரங்கள் மர்மாகவே உள்ளது. எனினும், இந்த காரில் 20 முதல் அதிகபட்சம் 30 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரி பேக் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 200 முதல் 250 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என தெரிகிறது. இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் eC3 மாடல் டாடா டியாகோ EV மாடலுக்கு போட்டியாக அமையும்.

    Next Story
    ×