search icon
என் மலர்tooltip icon

    கார்

    சிஎன்ஜி விற்பனையில் மாஸ் காட்டும் மாருதி சுசுகி
    X

    சிஎன்ஜி விற்பனையில் மாஸ் காட்டும் மாருதி சுசுகி

    • தற்போது 600,000 யூனிட் சிஎன்ஜி வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளோம்.
    • கடந்த ஆண்டு, நாங்கள் விற்பனை செய்த ஒவ்வொரு நான்காவது வாகனமும் சிஎன்ஜி மாடலாக இருந்தது.

    மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகனங்கள் விற்பனையில் 33% சிஎன்ஜி மாடல்கள் என அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி தற்போது 13 சிஎன்ஜி கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் சிஎன்ஜி மாடலும் அடங்கும்.

    மாருதியின் சிஎன்ஜி போர்ட்ஃபோலியோவில் ஆல்டோ கே10, எஸ்-பிரஸ்ஸோ, செலிரியோ, ஈகோ, வேகன்ஆர், ஸ்விஃப்ட், டிசையர், பிரெஸ்ஸா, எர்டிகா, பலேனோ, ஃப்ரான்க்ஸ், கிராண்ட் விட்டாரா மற்றும் எக்ஸ்எல்6 போன்ற மாடல்கள் உள்ளன.

    மாருதி சுசுகியின் மூத்த செயல் அதிகாரி பார்த்தோ பானர்ஜி, சிஎன்ஜி கார்கள் இப்போது எங்களின் ஒட்டுமொத்த விற்பனையில் 33% ஆகும். அதாவது நாங்கள் விற்கும் ஒவ்வொரு மூன்றாவது கார் சிஎன்ஜி மாடல் என்று தெரிவித்தார்.

    மாருதி தனது சிஎன்ஜி கார் விற்பனையை ஆண்டுக்கு ஆண்டு 25%-க்கும் அதிகமாக அதிகரித்து FY25 இல் 600,000 யூனிட்களாக உயர்த்த இலக்கு வைத்துள்ளது.



    "கடந்த ஆண்டு, நாங்கள் விற்பனை செய்த ஒவ்வொரு நான்காவது வாகனமும் சிஎன்ஜி மாடலாக இருந்தது. FY24 இல் நாங்கள் 477,000 யூனிட் சிஎன்ஜி வாகனங்களை விற்றோம். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் FY25 வரை 221,000 யூனிட்களை விற்றோம். தற்போது 600,000 யூனிட் சிஎன்ஜி வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளோம்.

    மாருதியின் ஒட்டுமொத்த கார் விற்பனையில் அதிகம் விற்பனையாகும் சிஎன்ஜி மாடல்களில் எர்டிகா, டிசையர், வேகன்ஆர் மற்றும் ஈகோ ஆகியவை அடங்கும். எர்டிகா சிஎன்ஜி 63%, டிசையர் 57%, வேகன்ஆர் 47% மற்றும் ஈகோ 48% யூனிட்கள் விற்பனையாகி உள்ளன.

    Next Story
    ×