search icon
என் மலர்tooltip icon

    கார்

    இந்திய உற்பத்தியில் புது மைல்கல் எட்டிய ஹோண்டா
    X

    இந்திய உற்பத்தியில் புது மைல்கல் எட்டிய ஹோண்டா

    • ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் உற்பத்தியில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது.
    • இந்திய சந்தையில் ஹோண்டா கார்ஸ் உற்பத்தி 25 ஆண்டுகளுக்கும் முன்பே துவங்கி நடைபெற்று வருகிறது.

    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் இந்திய உற்பத்தியில் இருபது லட்சம் யூனிட்களை கடந்து அசத்தி இருக்கிறது. இந்திய சந்தையில் பிரபல செடான் மாடலாக இருக்கும் ஹோண்டா சிட்டி இருபது லட்சமாது யூனிட்டாக வெளியிடப்பட்டு உள்ளது. இந்த கார் ஹோண்டா நிறுவனத்தின் தபுகாரா ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது.

    1997 டிசம்பர் மாத வாக்கில் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி பணிகளை துவங்கியது. முதன் முதலில் ஹோண்டா சிட்டி கார் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது உள்நாட்டு தேவை மட்டுமின்றி 16 நாடுகளுக்கும் ஹோண்டா நிறுவனம் அமேஸ் மற்றும் சிட்டி மாடல்களை ஏற்றுமதி செய்து வருகிறது.

    கடந்த 25 ஆண்டுகளாக ஹோண்டா நிறுவனம் இந்திய வியாபாரத்தை கட்டமைப்பதற்காக ரூ. 10 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்து இருக்கிறது. 2020 வாக்கில் கிரேட்டர் நொய்டா ஆலை மூடப்பட்டதில் இருந்து இந்தியாவில் செயல்பட்டு வரும் ஒற்றை உற்பத்தி ஆலை ராஜஸ்தானில் செயல்பட்டு வருகிறது. 450 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனம் தற்போது ஹோண்டா ஜாஸ், ஹோண்டா அமேஸ், ஹோண்டா WR-V மற்றும் ஹோண்டா சிட்டி போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இத்துவர தேர்வு செய்யப்பட்ட ஹோண்டா கார்களுக்கு அதிகபட்சம் ரூ. 63 ஆயிரத்து 144 வரையிலான சலுகைகளுடன் கிடைக்கிறது. இந்த சலுகைகள் நவம்பர் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

    Next Story
    ×