search icon
என் மலர்tooltip icon

    கார்

    ரூ. 8 லட்சம் பட்ஜெட்டில் பலேனோ CNG காரை அறிமுகம் செய்த மாருதி சுசுகி
    X

    ரூ. 8 லட்சம் பட்ஜெட்டில் பலேனோ CNG காரை அறிமுகம் செய்த மாருதி சுசுகி

    • மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் CNG கார் மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
    • முதல் முறையாக நெக்சா பிராண்டிங் காரிலும் CNG கிட் வசதியை மாருதி சுசுகி நிறுவனம் வழங்கி இருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய பலேனோ மாடலில் CNG கிட் வசதியை வழங்கி இருக்கிறது. புதிய மாருதி சுசுகி பலேனோ CNG மாடல் விலை ரூ. 8 லட்சத்து 28 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பலேனோ CNG மாடலை மாதாந்திர சந்தா முறையில் வாங்கும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய பலேனோ மாடலுடன் XL6 CNG காரும் அறிமுகமாகி இருக்கிறது.

    புதிய பலேனோ CNG மாடலில் 1197சிசி, NA, நான்கு சிலண்டர்கள் கொண்ட டூயல் ஜெட் டூயல் VVT பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 89 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. CNG மோடில் இந்த என்ஜின் 76 ஹெச்பி பவர், 98.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    மாருதி சுசுகி பலனோ CNG மாடல் லிட்டருக்கு 30.61 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுசுகி தெரிவித்து இருக்கிறது. புதிய பலேனோ CNG செயல்திறனும் ஸ்விப்ட் CNG மாடலின் செயல்திறனும் ஒரே அளவில் உள்ளன. பலேனோ CNG மாடலில் 7-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஸ்மார்ட்பிளே ப்ரோ, எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், 40-க்கும் அதிக கனெக்டெட் கார் அம்சங்கள், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 6 ஏர்பேக், ரியர்வியூ கேமரா, பார்க்கிங் சென்சார்கள் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டிஎப்டி டிஸ்ப்ளே, என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் ஸ்விட்ச், ரியர் டி-ஃபாகர், யுஎஸ்பி டைப் ஏ மற்றும் சி போர்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    Next Story
    ×